Vijay angrily stated DMK is evil force, TVk is pure force, contest in the upcoming elections will be between two 
தமிழ்நாடு

”திமுக தீய சக்தி, தவெக தூய சக்தி” : எம்ஜிஆர், ஜெ. பாணியில் விஜய்..

திமுக தீய சக்தி, தவெக தூய சக்தி, வரும் தேர்தலில் இருவருக்கும் இடையே தான் போட்டி என்று, விஜய் ஆவேசத்துடன் தெரிவித்தார்.

Kannan

தவெக பொதுக் கூட்டம்

கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி எதையும் நடிகர் விஜய் நடத்தவில்லை. கடந்த வாரம் முதன்முறையாக பாண்டிச்சேரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். மத்திய அரசையும், தமிழக அரசையும் கடுமையாக சாடிய அவர், மக்கள் பிரச்சினைகளை முன்வைத்தார்.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி

இதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 18ம் தேதி ( இன்று ) பொதுக்கூட்டம் நடத்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசினார்.

தவெக தலைவர் விஜய்

சென்னையில் இருந்து கோவைக்கு தனி விமானம் மூலம் சென்ற அவர், அங்கிருந்து கார் மூலம் பெருந்துறை சென்றார். வழிநெடுகிலும், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து, பெருந்துறையில், நடைபெற்ற பொதுக்கூட்டதில் விஜய் உரையாற்றினார்.

தாயின் பேரன்பு - எதையும் சாதிக்கலாம்

மஞ்சள்.. நல்ல நிகழ்ச்சிகளை தொடங்கும் முன்பு மஞ்சளை பயன்படுத்துவார்கள். தவெக கொடியிலும் மஞ்சள் நிறம் இருக்கிறது. எனவே, மஞ்சளுக்கு பெயர் போன மண் ஈரோடு. தாயின் பக்கபலம் இருந்தால், உலகில் எதையும் சாதிக்கலாம்.

மக்கள் என்னை கைவிட மாட்டார்கள்

சூழ்ச்சி செய்யும் கூட்டத்திற்கு மக்களுக்கும் விஜய்க்கும் இருக்கும் உறவு என்னவென்று தெரியாது. என்ன முயற்சித்தாலும், மக்களுக்காக வந்திருக்கும் விஜயை, மக்கள் கைவிட மாட்டார்கள். உங்களுக்காக வாழ்நாள் பூரா நன்றியோட இருப்பேன். நான் சினிமாவுக்கு வந்த 10 வயதில் தொடங்கிய இந்த உறவு என்றும் விட்டுப் போகாது.

ஆட்சியா? கண்காட்சியா? என்ன பண்றீங்க!

வள்ளுவர் கோட்டத்திற்கு காட்டும் அக்கறையை மக்களுக்காக காட்ட ஏன் மறுக்கறீங்க. இங்கு ஆட்சி நடக்கிறதா? கண்காட்சி நடக்கிறதா? ஈருட இரும்பு மனிதர், இட ஒதுக்கீடை கொண்டு வந்தவர், வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கு குரல் கொடுத்தவர் தந்தை பெரியார்.

பெரியார் வழியில் அரசியல்

பெரியாரின் கொள்கையில் நாம் எடுத்து இருக்கிறோம். அண்ணா, எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து, அவர்களின் அரசியல் முன்னெடுப்பை நாம் எடுத்து இருக்கிறோம். எங்கள் வழியில் நாங்கள் அரசியல் செய்கிறோம்.

என்னை பார்த்து உங்களுக்கு பயம்?

என்னை பார்த்து உங்களுக்கு ஏன் பயம்? உங்களுக்கு காசு துணை, எனக்கு மக்களின் Mass தான் துணை. தவெகதான் உங்களுக்கு பொருட்டே இல்லையே? ஆனா ஏன் கதறுகிறீங்க?

பெரியார் பெயரில் கொள்ளை!

பெரியார் பெயரை சொல்லி, ஆட்சியில் இருப்பவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள். எனவே, தவெகவின் அரசியல் எதிரி அவர்கள் தான். நம்முடைய கொள்கை எதிரி யார் என்பது மக்களுக்கு தெரியும்.

எதிரிகளை அடையாளம் கண்ட பிறகே களம் வந்து இருக்கிறோம். அவர்களை மட்டும் தான் எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

சொன்னதை செஞ்சீங்களா?

தேர்தல் வாக்குறுதிகயில் சொன்னதை செஞ்சாங்களா? திமுக மற்றும் பிரச்சினைகளை எப்போதும் பிரிக்கவே முடியாது. மஞ்சள் விவசாயிகளுக்கு திமுக அரசு ஒன்றுமே செய்யவில்லை. முதலில் மண்டையில் இருக்கும் கொண்டைய மறையுங்க. கரும்பு, நெல்லுக்கு விலை நிர்ணயம் செய்வதிலும் பிரச்சினை. லஞ்சம் கொடுத்தாலும், நெல் கொள்முதல் ஒழுங்காக நடப்பதில்லை. மஞ்சளுக்கும் நியாயமான விலை நிர்ணயம் செய்வதில் ஆட்சியாளர்களுக்கு என்ன தயக்கம்?

எங்களை ஒடுக்க முயற்சி

எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க, ஆட்சியாளர்களுக்கு தவெக வளர்ச்சி, அதை ஒடுக்கும் முயற்சியில் தான் அதிக அக்கறை. சொன்னாங்களே செஞ்சாங்களா? இந்த கேள்விக்கு ஆட்சியாளர்களிடம் பதிலே இல்லை.

மணல் கொள்ளை போல ஈரோடு மாவட்டத்தில் செம்மண் கொள்ளையும் நடக்க வாய்ப்பு இருக்கு. சிறுகுறு தொழில்களுக்கு பீக் அவர்களில் கூடுதல் மின் கட்டணம்? மாடல் அரசு என்று கூறிக்கொள்ளும் உங்களுக்கு கூச்சமாக இல்லையா?

சலுகைகளை நான் எதிர்க்கவில்லை

சலுகைகளுக்கு எதிரானவன் நான் கிடையாது. மக்களுக்கான சலுகைகளை இலவசம் என்று கூறி அசிங்கப்படுவதில் எனக்கு உடன்பாடு. மக்களை விமர்சிப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டேன். மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம், வசதி, கௌரவம் உயர்ந்தால் அவர்களுக்கு அனைத்தும் கிடைக்கும். மக்கள் பணத்தை அவர்களுக்கே கொடுப்பதை எப்படி இலவசம் என்று சொல்ல முடியும்.

அனைவருக்கும் வீடு, வீட்டில் ஒருவர் பட்டதாரி என்றும் சொல்லும் ஆட்சியாளர்களே? தமிழகத்தில் யாரும் வாடகை வீட்டில் இல்லையா? பள்ளிகளில் இடைநிற்றல் அதிகமாக உள்ள மாநிலம் எது?

பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா?

பெண்களுக்கு, குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு இருக்கிறதா? பதில் சொல்லுங்க சார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பாதுகாப்பில் சமரசம் என்பதே இருக்காது. திரித்து பேசி, அவதூறு பரப்பும் ஆட்சியாளர்களின் திட்டம் பலிக்காது.

திமுக தீய சக்தி, தவெக தூய சக்தி

எம்ஜிஆர், ஜெயலலிதா எப்போதும் ஆவேசமாக திமுகவை தீய சக்தி என்றார்கள். நாமும் சொல்வோம் “ திமுக தீய சக்தி, திமுக தீய சக்தி, திமுக தீய சக்தி” தான்

தீய சக்தி - தூய சக்தி இடையே தான் போட்டி

ஆனால், தவெக தூய சக்தி சட்டமன்ற தேர்தல் தீய சக்திக்கும், தூய சக்திக்கும் தான் போட்டி. செங்கோட்டையன் அவர்கள் தவெகவிற்கு வந்தது மிகப்பெரிய பலம், இதைபோல மேலும் பலர் வருவார்கள். அவர்களுக்கும் உரிய முக்கியத்துவம் வழங்கப்படும்” இவ்வாறு விஜய் பேசினார்.

=============