Vijay announced election observers and a task force TVK forMaduranthakam, Dharapuram by-elections source:thamizhalai,ai generated
தமிழ்நாடு

”களமிறங்கும் விஜய் டீம்” : மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் : தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம், சூடுபிடிக்கும் களம்..!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்காக தவெக சார்ப்பில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பணிக்குழுவை அக்கட்சித் தலைவரும் முதல்வருமான விஜய் அறிவித்துள்ளார்.

Kannan

இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் உள்ளிட்ட 2 தனித்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேகம் காட்டும் திமுக

திமுக, அதிமுக, தவெக வேட்பாளர்களை அறிவித்து, களத்தில் இறங்கி இருக்கின்ற. சட்டமன்ற தேர்தலில் இழந்த தோல்வியை ஈடுசெய்யவும் , தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்க முடியாத வகையில், திமுக தீவிர அரசியலை முன்னெடுத்து இருக்கிறது.

பழிதீர்க்கும் முனைப்போடு அதிமுக

தனது எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு, தவெகவில் இணைந்த நிலையில், அவர்களே வேட்பாளர்களாகவும் களமிறங்குவதால், அவர்களை தோற்கடிக்க கங்கணம் கட்டி வேட்பாளர்களை இறக்கி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

தவெகவிற்கு நிர்பந்தம்

பெரும்பான்மை இல்லாத சூழலில், ஒவ்வொரு இடைத்தேர்தலும், தவெகவிற்கு மிகவும் முக்கியமாகும். எனவே, வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டு அந்தக் கட்சி வேட்பாளர்களை அறிவித்து, முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.

தவெக பொறுப்பாளர்கள் நியமனம்

இந்தநிலையில், அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகத் தேர்தல் பணிக்குழு மற்றும் கண்காணிப்பாளர்களை நியமித்துத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தேர்தல் பணிகளையும் கண்காணிப்பதற்காக அமைச்சர்கள் என். ஆனந்த், கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் CTR நிர்மல் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் பணிக்குழு விவரங்கள்:

1. மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி:

பொறுப்பாளர்: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

இணைப் பொறுப்பாளர்கள்: அமைச்சர்கள் B. ராஜ்குமார், K. தென்னரசு, R. வினோத்

துணைப் பொறுப்பாளர்கள்: P. சரவணமூர்த்தி MLA, S. தியாகராஜன் MLA, B. விஜயராஜ் MLA, J. காமாட்சி MLA மற்றும் செங்கல்பட்டு தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் M.S. பாலாஜி (எ) மணிகண்டன்.

2. தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி:

பொறுப்பாளர்: அமைச்சர் Dr. K.G. அருண்ராஜ்

இணைப் பொறுப்பாளர்கள்: அமைச்சர்கள் M. விஜய் பாலாஜி, C. விஜயலட்சுமி, லோகேஷ் தமிழ்ச்செல்வன்

துணைப் பொறுப்பாளர்கள்: S. பாலமுருகன் MLA, V. சத்தியபாமா MLA, K. ராம்குமார் MLA, C.S. திலீப் MLA மற்றும் M. சத்யா MLA.

தவெகவினருக்கு விஜய் வேண்டுகோள்

நியமிக்கப்பட்டுள்ள குழுவினருக்கு அந்தந்தத் தொகுதிக்குட்பட்ட கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

வெற்றிச் சின்னமான விசில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை இடைத்தேர்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க அனைவரும் தேர்தல் பணியாற்ற வேண்டும்.

விரைவில் தவேக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படும் என்றும் தனது அறிக்கையில் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

====================