Vijay doesn't have to go to Karur to file a petition with the DGP - Annamalai! 
தமிழ்நாடு

விஜய் டிஜிபியிடம் மனு அளித்து கரூர் செல்ல வேண்டியதில்லை- அண்ணாமலை!

விஜய் கரூருக்கு செல்ல போலீசாரின் அனுமதி எதற்கு என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Bala Murugan

செய்தியளார்களை சந்தித்த அண்ணாமலை

Vijay doesn't have to go to Karur to file a petition with the DGP - Annamalai! சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணி உருவப்படத்திற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் என் ஊர். யார் வேண்டுமானாலும் வரலாம். அனுமதி தேவையில்லை. விஜய் கரூர் செல்ல உரிமை உள்ளது, நாட்டில் யார் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று தெரிவித்துள்ளார். டிஜிபியிடம் மனு அளித்து செல்ல வேண்டியதில்லை. கரூர் மக்கள் பூதாகரமானவர்கள் அல்ல என்றும் விஜய் கரூருக்கு செல்ல போலீசாரின் அனுமதி எதற்கு? இறப்பு வீட்டுக்கு வருவோரிடம் எப்படி நடக்க வேண்டும் என்று கரூர் மக்களுக்கு தெரியும் என்று கூறினார்.

கூட்டணி குறித்து அண்ணாமலை

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பதிலளித்த அண்ணாமலை, தேர்தலுக்கும் கூட்டணிக்கும் அவகாசம் உள்ளது. அதிமுக கூட்டணிக்கு விஜய் வருவாரா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்றார்.

ஸ்டாலின் முகாம் கண்டனத்திற்குரியது

மேலும் திருமாவளவன் உடன் வந்தவர்கள் வழக்கறிஞரை தாக்கியது தவறு. வழக்கறிஞர் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு திருமாவளவன் தான் பொறுப்பு. இன்னும் நட்பில் உள்ள ஆதவ் அர்ஜுனாவை தவெகவுக்கு அனுப்பிவிட்டு பாஜகவை திருமாவளவன் திட்டுகிறார். விடுதலை சிறுத்தைகளின் வாக்குகள் வேறு எங்கோ செல்வதால் திருமாவளவன் பதற்றப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார். கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரை வைத்தது சரிதான் என்றும் அரசு பரிந்துரைத்த பட்டியலில் கருணாநிதி பெயர் இருக்கும்போது எம்.ஜி.ஆர் பெயர் ஏன் இல்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். தலைவர்கள் பெயர் விடுபட்டதால் சாதி பெயர்களை நீக்கும் அரசாணையை திரும்ப பெற வேண்டும். பள்ளிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்துவது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.