Vijay forms government, supported by CBI, CPI-M, four others support,  google
தமிழ்நாடு

ஆட்சி அமைக்கிறார் விஜய் : ஆதரவு வழங்கிய சிபிஐ, சிபிஎம் : தவெக பலம் 116 ஆனது, ஆட்சி அமைக்க 2 சீட்கள் தேவை...

தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்திருந்தநிலையில் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட்நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியுள்ளது

Rohini

நீடித்து வந்த இழுபறி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அக்கட்சிக்கு 5 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவளித்த நிலையில், விஜய் ஆட்சியமைக்க மேலும் 6 பேரின் ஆதரவு தேவைப்பட்டது.

தொடர்ந்து ஆளுநரை சந்தித்து வந்த நிலையில் , இன்று அவருக்கு 4 அமைச்சர்களின் ஆதர்வு கிடைத்துள்ளது .

ஆதரவு கோறிய விஜய்

ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுநரிடம் தவெக தலைவர் விஜய் கோரிக்கை வைத்த நிலையில், பெரும்பான்மைக்கான பட்டியலை அளிக்குமாறு அவர் கேட்டிருந்தார். இந்த நிலையில் விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டிருந்தது.

நிபந்தனையற்ற ஆதரவு

தொடர்ந்து பேச்சுவார்தை நடத்தி வந்த நிலையில் இன்று ,இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் அகிய கட்சிகள் நிபந்தனையற்ற அதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளது

அதரவு கடிதத்தை வழங்கிய கட்சிகள்

ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதனையடுத்து ஆட்சியமைப்பதற்கு தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , அதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியும் அதரவு வழங்கியுள்ளது.

இதற்கான ஆதரவு கடிதத்தை தவெக எம்எல்ஏ சிடிஆர்.நிர்மல்குமாரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வழங்கினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருத்துறைப்பூண்டியில் போட்டியிட்ட மாரிமுத்து மற்றும் தளியில் போட்டியிட்ட ராமச்சந்திரன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

தவெக ஆட்சியமைக்க இன்னும் 2 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில் விசிக அல்லது ,பாமாக வருமா என்றா கேள்வி ஒரு பக்கம் இருக்க , நாளை ஆட்சி அமைப்பாரா விஜய் ?

=============