அரசின் சாதனை - பட்டியலிட்ட முதல்வர்
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பதிலளித்து பேசிய முதல்வர் விஜய், தவெக ஆட்சி அமைந்து 40 நாட்கள் முடிவடைந்திருக்கிறது. இந்த நாட்களில், அரசு முன்னெடுத்த பணிகளை பட்டியலிட்டார் முதல்வர்.
“Party Fund" திமுகவுக்கு விளாசல்
எதிர்க்கட்சிகள் மீதான கடுமையான குற்றச்சாட்டுகளையும் அவர் முன் வைத்தார். குறிப்பாக, “Party Fund" அதாவது கட்சி நிதி எனும் பெயரில் பல்வேறு ஊழல் நடந்ததாக முதல்வர் விஜய் குற்றம் சாட்டினார்.
திமுகவினர் அமளி
அப்போது எதிர்கட்சியான திமுக உறுப்பினர்கள் எழுந்து, “ஆதாரத்துடன் பேசுங்கள்” என்று அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் முதல்வர் பேசிய பேசும் போது குறிப்பெடுத்துக்கொண்டு, பின்னர் கேள்விகளை முன்வைக்கலாம் என்று கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் கேள்வி
“கட்சி நிதி எனும் பெயரில் ஊழல் செய்துள்ளதாக முதல்வர் சொல்கிறார். தைரியம் இருந்தால், எந்த கட்சி என்று சொல்லுங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
முதல்வர் சொன்ன குட்டிக் கதை
திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பிறகு ஒரு குட்டி ஸ்டோரியை கூறினார். “ஒரு ஊர்ல, பெரியவர் ஒருவர் வெயில் ஜாஸ்தியாக இருக்குன்னு கண்ணுக்கு மேல கை வைத்து சுத்தி முத்தி தேடிட்டு இருந்தாராம். அப்போ ஒரு சின்ன பையன், ’என்ன தேட்றீங்க?’ என கேட்க,
எங்களுக்கும் கதை சொல்லத் தெரியும்
‘இல்ல தம்பி, இங்கதான் உங்க அப்பா இருப்பாருன்னு சொன்னாங்க, எங்க அவர காணோம்’ என்றாராம்” இதை சொல்லிவிட்டு, “எங்களுக்கும் நக்கலா, நையாண்டியா சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் குட்டி கதை எல்லாம் சொல்லத் தெரியும்” என்று கூறினார்.
சிரித்து, ரசித்த பழனிசாமி
இதை, எதிரில் அமர்ந்திருந்த எடப்பாடி பழனிசாமி ரசித்து குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதல்வரின் பஞ்ச் வசனம்
கடந்த ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகளை முன் வைத்ததோடு, “மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா தொட மாட்டோம், தொடவும் விட மாட்டோம், தொட்டா விட மாட்டோம், இதுக்கு முன்னாடி தொட்டவங்களையும் விட மாட்டோம்” என்று பஞ்ச் வசனம் பேசி பேரவையை அதிர வைத்தார் முதல்வர் விஜய்.
முதல்வர் விஜய், பேப்பர் இல்லாமல் பேச மாட்டார், எதுவும் பேச தெரியாது என எதிர்கட்சியினர் பல நாட்களாக விமர்சனங்களை வைத்து வந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரது பேச்சு அமைந்து இருந்தது.
சட்டப்பேரவையில் குட்டிக் கதை கூறி, பஞ்ச் வசனங்கள் பேசி, முதல்வர் பேசுவதே இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்தார் விஜய்.
ஸ்டாலின் போல சைகை
தேர்தலுக்கு முன்பு கூட்டணி முடிந்தது என்பதை, பினிஷிங் செய்ததை குறிக்கும் சைகை காட்டி அப்போது வைரலானார் திமுக தலைவர் ஸ்டாலின்.
பேரவையில் கலகலப்பு
அதேபோன்று, பேரவை தலைவரின் அனுமதியை பெற்று, உரையை முடிக்கும் போது செய்து காட்டினார் முதல்வர் விஜய். இதை தவெக உறுப்பினர்கள் வெகுவாக ரசித்தனர்.
========================
==============