The TVK government is the only government to have made more than 20 announcements for the minority community.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்திற்கு நேரில் வந்த ஒரே முதல்வர் விஜய்தான் எனச் சட்டப்பேரவையில் அமைச்சர் ஷாஜகான் புகழாரம்.
வரலாற்று சாதனை நியமனம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) அலுவலகத்துக்கு நேரில் வருகை தந்த ஒரே முதல்வர் ஜோசப் விஜய்தான் என்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் சட்டப்பேரவையில் பாராட்டிப் பேசியுள்ளார்.
சிறுபான்மையினருக்கான 20க்கும் மேற்பட்ட திட்டங்கள்
சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் ஷாஜகான், "வரலாற்றிலேயே முதன்முறையாக நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மை சமுதாயத்திற்கு 20-க்கும் அதிகமான அறிவிப்புகளை செய்த ஒரே அரசு த.வெ.க. அரசுதான்.
அதற்கு முதல்வர் விஜய்க்கு சிறுபான்மை சமூகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது" என்று அமைச்சர் ஷாஜகான் குறிப்பிட்டு பேசினார்.
அதில் முக்கிய அறிவிப்புகளாக:
கிறிஸ்தவர்களின் கல்லறைத் தோட்டம்
ஹஜ் மானியம் உயர்வு
புதிய மகளிர் உதவி சங்கம்
காயிதே மில்லத் பெயரில் விருது
வேளாங்கண்ணி மற்றும் நாகூரில் தங்குமிடங்கள் அமைத்தல் போன்றவை இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒரே முதல்வர் விஜய் தான்
முன்னதாகப் பேசிய அமைச்சர் ஷாஜகான், "த.வெ.க. ஆட்சி அமைக்க IUML ஆதரவு அளித்தது, அதன்படி முதல்வர் விஜய் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற மறுநாள் மே 11 அன்று நேரடியாக எங்கள் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
IUML கட்சிக்கான வரலாறை எடுத்துரைத்த அமைச்சர்
எத்தனையோ முதல்வர்களை உருவாக்கிய வரலாறு IUML கட்சிக்கு இருக்கிறது; ஆனால் எந்தவொரு முதல்வரும் எங்கள் கட்சி அலுவலகத்திற்கு வந்த வரலாறு கிடையாது. முதல்முறையாக வருகை தந்த முதல்வர் விஜய்தான்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
======