Vijay Sangeetha case; Family Court orders to appear in person on June 15 and give explanation  google
தமிழ்நாடு

விஜய்-சங்கீதா விவகாரத்து வழக்கு : ஜூன் 15ல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, குடும்பநல நீதிமன்றம் உத்தரவு!

விஜய் மற்றும் அவரது மனைவி விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஜூன் 15 ல் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

Rohini

வழக்கு பின்னணி

சங்கீதா தாக்கல் செய்த மனுவில் நடிகர் விஜய் மீது மிக முக்கியமான சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்

விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததாகவும், அதன் மூலம் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்வதாகவும் தெரிவித்திருந்த நிலையில்,இந்த விவகாரத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக,

2021-ம் ஆண்டு முதல் ஒரே வீட்டில் வசித்தாலும் இருவரும் தனித்தனியாகவே வாழ்ந்து வந்ததாகக் குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

மனுவில் எச்சரிக்கை

மேலும் விஜ்யிடமிருந்து ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அந்த நடிகை யார் என்கிற விவரங்களை நீதிமன்றத்தில் பகிரங்கமாக வெளியிட நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

வழக்கின் முதற் கட்ட விசாரணை

இந்த வலகின் முதற் கட்ட விசரணையானது இன்று நீதிபதி அம்ராவின் முன் வந்த நிலையில் ,விஜய் இன்று நேரில் ஆஜராக ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இருப்பினும் தேர்தல் பணிகள், பாதுகாப்பு காரணங்களாலும் விஜயும், சங்கீதாவும் நேரில் ஆஜராவர்க்ள் என கூறப்பட்டிருந்தது.

விசாரணை ஒத்திவைப்பு

இந்த நிலையில், இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்த நிலையில் , இவ்வழக்கை ஜூன் 15 திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

===========