Vijay, Udhayanidhi welcome Stalin at Stalin's residence  google
தமிழ்நாடு

ஸ்டாலின் இல்லத்தில் விஜய், வரவேற்ற உதயநிதி ஸடாலின்! : வைகோவுடனும் சந்திப்பு...

முன்னாள் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய்.

Rohini

முதல்வராக பதவியேற்றுக்கொண்ட விஜய்

சட்மன்ற தேர்தலில் பெரும்பான்மையயிலான வாக்குகளை பெற்று தமிழ முதல்வராக பொறுப்பேற்று கொண்டார்.

இந்த நிலையில் இன்று தவெக அமைச்சர்கள் எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர் விஜயும் எம்எல்ஏவாக பதவியேற்றார்.

ஸ்டாலினுடன் சந்திப்பு

பின்னர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்தித்தார்.அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்

தனது இல்லத்திற்கு வருகை தந்த தவெக தலைவர் விஜயை பொன்னாடைஅணிவித்து வர வேற்றார் ஸ்டாலின். முதல்வர் விஜயும் ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்ப்பு பெற்றார்.

முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் இந்த சந்திப்பு

முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், மரியாதை நிமித்தமாக மு.க. ஸ்டாலினை சந்திதாகக் கூறப்படுகிறது. பிரசாரத்தின் போது ஸ்டாலின் சார் என கடுமையான விமரிசித்துப் பேசிய முதல்வர் ஜோசப் விஜய், எவ்வாறு பேசுவார்,முன்னாள் முதல்வர் மு.க, ஸ்டாலினும், முதல்வர் விஜய்யும் என்ன பேசுவார்கள் என்பது தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த சந்திப்பு நடந்தது.

வைகோ இல்லத்தில் விஜய்

திமுக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற விஜய், பின்னர் அண்ணாநகர் சென்று, மதிமுக தலைவர் வைகோவை சந்திது வாழ்த்து பெற்றார். அவரை துரை வைகோ எம்பி வரவேற்றார். பின்னர் விஜயை கார் வரை வந்து வழியனுப்பி வைத்தார் வைகோ.

============