Vijay vs. Annamalai: A New Party on June 4th? Is Annamalai Entering the Fray with Rajini's Support?
60 ஆண்டுகால திராவிட கட்சிகளின் நிலை
தமிழக அரசியல் களம் அண்மைக்காலமாக அதிரடி மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் மூலமாக, சுமார் 60 ஆண்டு காலமாக மாறி மாறி ஆட்சி செய்து வந்த இரு பெரும் திராவிடக் கட்சிகளும் ஒரே நேரத்தில் எதிர்க்கட்சி வரிசைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஆட்சிக் கட்டிலில் தவெக
இளம் தலைமுறை வாக்காளர்களின் ஏகோபித்த ஆதரவோடு, வெறும் இரண்டரை வயதே தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து புதிய வரலாறு படைத்துள்ளது.
பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை?
இந்த அரசியல் மாற்றத்தை பயன்படுத்திக் கொள்ள பல தலைவர்களும் தீவிரம் காட்டி வரும் வேளையில், தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, கட்சியிலிருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூன் 4-ல் புதிய கட்சி?
வரும் ஜூன் 4-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள தனது பிறந்தநாளன்று, அவர் புதிய கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.
அண்ணாமலைக்கு பின்னால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்?
பாஜகவின் மாநிலத் தலைவர் பதவி பறிக்கப்பட்ட பிறகு, அண்ணாமலைக்குத் தேசிய அளவில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்காததால் தனிக்கட்சி தொடங்கும் முடிவுக்கு அவர் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணாமலையுடன் கைகோர்க்கும் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள்
இவருக்கு பின்புலமாக நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு அளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இருவருக்கும் இடையே நேரடிச் சந்திப்பு நிகழ உள்ளதாகவும், அண்ணாமலையின் புதிய கட்சிக்கு ஆதரவாக ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளைக் களமிறக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
வைரலாகும் அண்ணாமலை ஆதரவாளர்களின் போஸ்டர்கள்
முன்னதாக, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் ரஜினிகாந்த் பங்கேற்றார். ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மூலமாகவே இவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் ரஜினியின் புகைப்படத்துடன் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
கோவையில் ஒட்டப்படும் 'மக்கள் சக்தி இயக்கம்' போஸ்டர்கள்
வழக்கமாக முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை, ரஜினி பாணியில் இமயமலைக்குச் சென்று வந்ததைத் தொடர்ந்து, அண்மையில் நேபாள பயணத்தையும் முடித்துள்ளார்.
கட்சிப் பணிகள் தொடக்கம்
இதற்கிடையே, கோவை பகுதியில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் 'மக்கள் சக்தி இயக்கம்' என்ற பெயரில் போஸ்டர்களை ஒட்டி, கட்சிப் பணிகளை தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது.
பாஜவில் இருந்து விலகினார் என்பதற்கான முக்கிய அறிகுறிகள்
சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை அண்ணாமலை சமூக வலைதளத்தில் கடுமையாக எதிர்த்ததும், நேற்று தனது காரில் இருந்த பாஜக கொடியை அவர் அகற்றியதும், அவர் பாஜகவிலிருந்து விலகுவதற்கான வலுவான அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றன.
'விஜய் Vs அண்ணாமலை' - பாஜகவின் 'பி-டீம்' திட்டமா?
தமிழகத்தில் பல கட்ட முயற்சிகளை எடுத்தும் பாஜகவால் நேரடியாகப் பெரும் வளர்ச்சியைப் பெற முடியவில்லை. திராவிடக் கட்சிகள் மற்றும் புதிய ஆளுங்கட்சியான தவெக ஆகியவற்றை எதிர்கொள்ள டெல்லி மேலிடம் ஒரு புதிய உத்தியைக் கையாளுவதாக அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
'விஜய் Vs அண்ணாமலை'
அதன்படி, தமிழ்நாட்டின் அரசியல் களத்தை 'விஜய் Vs அண்ணாமலை' என்று மாற்றும் நோக்கில், அண்ணாமலையைத் தங்களின் 'பி-டீம்' ஆக பாஜகவே களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஓரங்கட்டப்படுவது போன்ற ஒரு பிம்பம்?
இதற்காகவே அவர் கட்சியில் ஓரங்கட்டப்படுவது போன்ற ஒரு பிம்பத்தைத் திட்டமிட்டு உருவாக்குவதாகவும், பாஜகவுடன் நெருங்கிய உறவில் இருக்கும் ரஜினிகாந்த், அண்ணாமலைக்கு ஆதரவு அளிப்பது இந்த மாஸ்டர் பிளானை உணர்த்துவதாகவும் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க : பாஜகவிலிருந்து விலகினார் அண்ணாமலை? டெல்லி ஆலோசனையில் பரபரப்பு திருப்பம்!
=====