தமிழக வெற்றிக் கழகம்
TVK Vijay Campaign in Erode : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு 72 நாட்கள் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். திமுக அரசையும், மத்திய அரசையும் அவர் கடுமையாக சாடி இருந்தார்.
ஈரோட்டில் மக்களுடன் சந்திப்பு
இதைத் தொடர்ந்து தவெக சார்பில் ஈரோட்டில் நாளை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. நாளை (18.12.2025, வியாழக்கிழமை) ஈரோடு, மூங்கில்பாளையத்தில் காலை 11 மணிக்கு தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் வரக்கூடாது
தவெக தொண்டர்கள் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார். ”கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்கள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை.
வாகனங்களில் பின்தொடரக் கூடாது
விஜய், நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும்போதும் அவரது வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வாகனங்களிலோ பின்தொடர்வது, போக்குவரத்திற்கு இடையூறாகச் செயல்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
மரங்கள், மின் கம்பங்கள் மீது ஏறக்கூடாது
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறக் கூடாது.
மின்விளக்கு கம்பங்கள், மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் ஆகியவற்றின் அருகில் செல்லக் கூடாது. சிலைகள் மற்றும் அவற்றைச் சுற்றி ஏதும் பாதுகாப்பு கிரில் கம்பிகள், தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், பள்ளி மாணாக்கர்களுக்கும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்வித போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்” என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
====
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு 72 நாட்கள் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். திமுக அரசையும், மத்திய அரசையும் அவர் கடுமையாக சாடி இருந்தார்.
ஈரோட்டில் மக்களுடன் சந்திப்பு
இதைத் தொடர்ந்து தவெக சார்பில் ஈரோட்டில் நாளை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. நாளை (18.12.2025, வியாழக்கிழமை) ஈரோடு, மூங்கில்பாளையத்தில் காலை 11 மணிக்கு தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் வரக்கூடாது
தவெக தொண்டர்கள் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார். ”கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்கள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை.
வாகனங்களில் பின்தொடர கூடாது