விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு
தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், நடிகருமான விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சங்கீதா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள்
மேலும் விஜய் மீது அடுகடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் பிரபல நடிகை ஒருவருடன் விஜய்க்கு தகாத உறவு இருப்பது தெரிந்ததும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் சுமூக பேச்சுவார்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகையுடன் உறவு
மேலும் விஜய் பிரபல நடிகையுடன் வெளிநாடுகளுக்கு செல்வதும் அந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவிய நிலையில் , விஜய் அதை மறுக்கவில்லை . அதனால் அவரும் குழந்தைகளுக்கும் அவமானங்களை அனுபவித்ததாக குரிப்பிட்டுள்ளார்.
தேவையான நேரத்தில் நடிகையின் பெயரை வெளியிடுவேன்
நடிகையின் பெயரை இப்போதைக்கு வெளியிட விரும்பவில்லை என்றும், தேவையான சூழலில் நெருக்கடி ஏற்பட்டால் பெயரை சொல்வேன் என்றும் கூறியுள்ளார்.
உடைந்துபோன திருமண உறவு
2024-2025 ஆம் ஆண்டிலேயே இதுதொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதிலிருந்து விஜய் பொருளாதார கட்டுப்பாடுகளை விதித்தார் . அதிலிருந்து திருமண உறவு முற்றிலும் உடைந்ததாகவும் கூறியுள்ளார்.
விவாகரத்து கோரி மனுத்தாக்கல்
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுத்தாக்கலில் சங்கீதா குறிப்பிட்டுள்ளவை
விஜயிடம் இருந்து விவாகரத்து வேண்டும்.
விவாகரத்து வழக்கு முடியும் வரை சங்கீதா நீலாங்கரை இல்லத்தில் தங்க உரிமை வேண்டும்.
விஜயின் வருமானம் மற்றும் சமூக நிலைக்கு ஏற்றவாறு நிரந்தர பராமரிப்பு தொகை வழங்க வேண்டும்.
விவாகரத்து கோரி தொடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கின் செலவுகள் அனைத்தையும் விஜயே ஏற்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மறுப்பு தெரிவிக்காத விஜய்
விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி வழக்கு பதிவு செய்த நிலையில், விஜய் தரப்பில் இருந்து இதுவரை எந்த மறுப்பும் வரவில்லை.
நீதிமன்றத்தில் விஜய் நேரில் ஆஜர்
இந்நிலையில் நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கானது செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் ஏப்ரல் 20 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. முதன்முதலாக விஜய் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், அவர் மீது அவரது மனைவி விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.