Vilathikulam Incident: Why the Silence on the Deaths of Women? Tamilisai Questions Leaders of the DMK Alliance. source : google
தமிழ்நாடு

விளாத்திகுளம் சம்பவம் : பெண்கள் உயிரிழப்பு சம்பவங்களில் மௌனம் ஏன்? : திமுக கூட்டணி தலைவர்களுக்கு தமிழிசை கேள்வி?

Tamilisai Soundararajan on Vilathikulam Incident : பெண்கள் குறித்து தவறாக பேசியதற்கு போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள், பெண்கள் உயிரிழப்பு சம்பவங்களில் மௌனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

S Kavitha

சென்னையில் உகாதி விழா கொண்டாட்டம்

Tamilisai Soundararajan on Vilathikulam Incident : சென்னையில் உள்ள தமிழக பாஜக மாநில தேர்தல் அலுவலகத்தில் உகாதி பண்டிகை விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மூத்த தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.

பெண்கள் உயிரிழப்பு சம்பவங்களில் மௌனம் காப்பது ஏன்

உகாதி விழா நிறைவு பெற்றபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெண்கள் குறித்து தவறாக பேசியதற்கு போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள், பெண்கள் உயிரிழப்பு சம்பவங்களில் மௌனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர் சந்திப்பின் போது தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது,

உகாதி பண்டிகை வாழ்த்து

தமிழகத்தில் உள்ள கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கும், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் வாழும் அனைவருக்கும் உகாதி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்தார்.

திராவிடம் என்பது இதுதான்

மேலும் தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் பல மொழி பேசும் மக்கள் ஒன்றிணைந்து வாழ்ந்து வருகிறார்கள் என்றும் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்ந்தது தான் திராவிடம் .

தமிழின் தொன்மையை மறைக்கும் திராவிடம்

ஆனால், தமிழ்நாட்டில் தமிழ் என்ற வார்த்தை மறைக்கப்பட்டு, திராவிடம் கொண்டு வந்ததே திமுக தமிழுக்கு இழைத்த அநீதி என்றும் தமிழின் தொன்மையை மறைப்பதற்காகத்தான் திமுக திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

முதல்வரின் பிரிவினைவாதம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உகாதி வாழ்த்து தெரிவிப்பதில் கூட பிரிவினையை ஏற்படுத்துவது மிகவும் வேதனையளிக்கிறது என்றார்.

கீழடியில் பிரதமரின் பங்கு

பிரதமர் மோடி தான் முதன்முதலில் கீழடிக்கு அதிக நிதி ஒதுக்கினார், ஆனால் அதனை மறைத்து வேறு விதமாக கூறப்படுகிறது என்றார்.

திமுக அடிமைக் கூட்டணி

எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு, டெல்லி பயணம் என்றாலே குழப்பமா? கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்க டெல்லி செல்வது இயல்பானது தான் என்றார். திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்தும் அடிமைக் கூட்டணி என்றும் விமர்சித்தார்.

திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு கேள்வி

தொடர்ந்து பேசிய தமிழிசை, பெண்களுக்கு எதிரான வார்த்தைகளை பேசினால் கண்டனத்திற்குரியது. ஆனால் திமுக கூட்டணி கட்சிகளுக்கு கேள்வியையும் முன்வைத்தார் .

விளாத்திகுளம் மாணவியின் படுகொலை

விளாத்திகுளம் மாணவியின் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்காத திமுக கூட்டணி கட்சிகள், ஒரு வார்த்தை தவறாக பேசப்பட்டதற்கு போராட்டம் நடத்துகிறீர்கள்.

இண்டியா தலைவர்களுக்கு கேள்வி

வார்த்தைக்காக கண்டனம் தெரிவிக்கும் நீங்கள், ஒரு பெண்ணின் வாழ்க்கைக்கு கண்டம் தெரிவிக்கிறீர்கள் என்றும் இந்த ஆட்சியின் அவலத்தை யாராவது பேசினீர்களா? திமுக கூட்டணி கட்சி தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.

இறுதியாக ஓ. பன்னீர் செல்வம் குறித்த கேள்விக்க, ஓபிஎஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை என்றும், தனது கொள்கைகளை மறந்துவிட்டு இருப்பதாகவும் அவரைப் பற்றி பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.