Vinayagar Chaturthi 2025 Festival Purchase in Tamil Nadu 
தமிழ்நாடு

தமிழகத்தில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி: பொருட்களை வாங்க ஆர்வம்

Vinayagar Chaturthi 2025 Purchase : தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படும் நிலையில், சிலைகள், பூஜை பொருட்கள் விற்பனை களை கட்டி உள்ளது.

Kannan

விநாயகர் சதுர்த்தி விழா :

Vinayagar Chaturthi 2025 Purchase : எப்போதுமே விநாயகர் சதுர்த்தி என்றால் தமிழகம் களைகட்டும். இந்த வருடமும் அப்படித்தான். விழாவுக்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். சதுர்த்தி விழாவுக்காக களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள், விற்பனைக்கு வந்துள்ளன.

களிமண் விநாயகர் சிலைகள் விற்பனை :

தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள்(Vinayagar Idols Sale) விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. உயரத்திற்கு ஏற்ப 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை சிலைகளுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. களிமண் பிள்ளையார் என்றாலும், அதையும் கலை நுணுகத்துடன், அழகுற தயாரித்து, வண்ணங்கள் பூசி விற்னைக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள். இவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

விநாயகர் குடைகள் :

விநாயகர் குடைகளும் விற்பனைக்காக குவிந்துள்ளன. நிறைய புதுமைகளும் குடைகள் வந்து இருப்பது, சிறுவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. விநாயகருக்கு அணிவிக்கப்படும் எருக்கம் பூ மாலைகள் மற்றும் ஒலைத்தோரணம், மாவிலைகளும் விற்பனைக்கு வந்துள்ளன.

பழங்கள், பூக்கள் விற்பனை :

பூஜைக்கு தேவையான பழங்கள் பூக்கள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனையும் களை கட்டி இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாள் காரணமாக தமிழகம் முழுவதும் பூக்கள் விலை அதிகரித்து இருக்கிறது. மதுரை மல்லி ஒரு கிலோ 1,300 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதேபோன்று, மற்ற பூக்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. பழங்களின் விலையும் கூடி இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

பூஜைக்கு தேவையான பொருட்கள்(Vinayagar Chaturthi 2025 Poojai Items) பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விநாயகருக்கு படைக்கும் பண்டங்களுக்கு தேவையான பொருட்கள் மளிகை கடைகளில் விற்பனை செய்யப்படுவதால், அங்கும் கூட்டம் குவிந்துள்ளது. எனவே, விநாயகர் சதுர்த்தியை தமிழகமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

கோவில்கள் விழாக்கோலம் :

கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தி(Vinayagar Chaturthi 2025) ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன. சிறப்பு பூஜைகள், பக்தர்கள் தரிசனம், பக்தர்களுக்கு பிரசாதம் என கோவில் பணியாளர்கள் அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள விநாயகர் கோவில்கள், பக்தர்கள் வரவேற்க காத்திருக்கின்றன .

===============