Vinayagar Chaturthi 2025 Purchase in Koyambedu Market 
தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி விழா 2025 : களைகட்டியுள்ள கோயம்பேடு சந்தை

Vinayagar Chaturthi 2025 Purchase in Koyambedu Market : விநாயகர் சதுர்த்திக்கு தேவையான பொருட்கள் வாங்க, கோயம்பேடு மொத்த சந்தையில் கூட்டம் அலைமோதுகிறது.

Kannan

விநாயகர் சதுர்த்தி விழா :

Vinayagar Chaturthi 2025 Purchase in Koyambedu Market : விநாயகப் பெருமான் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் இந்த விழா எப்போதும் போல விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்காரணமாக பூஜை பொருட்களின் விலை உயர்ந்து இருக்கிறது.

கோயம்பேடு மொத்த சந்தை :

சென்னையை பொருத்தவரை எந்த விழா என்றாலும், கோயம்பேடு(Koyambedu Market in Chennai) மொத்த சந்தை களைகட்டும். சில்லரை வணிகத்தை விட அங்கு சற்று விலை குறைவாக இருக்கும் என்பதால், பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதும் அதன்படி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில் பொருட்களை வாங்க கூடி இருக்கிறார்கள்.

களை கட்டும் பூக்கள் விற்பனை :

கோயம்பேடு சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடக, கேரளா உட்பட பல்வேறு இடங்களிலும் பூக்கள் கொண்டுவரப்பட்டு மொத்த விற்பனையும், சில்லறை விற்பனையும் நடைபெற்று வருகிறது. கோயம்பேடு பூ மார்க்கெட்டை(Koyambedu Flower Market) பொருத்தவரை சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் விலை உயரும்.

பூக்கள், பழங்கள் விலை அதிகரிப்பு :

அந்த வகையில், சாமந்தி பூ விலை ஒரு கிலோ 300 ஆக உயர்ந்துள்ளது. மல்லிகை பூ விலை ஒரு கிலோ ரூ.500 விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல பழங்களின் விலையும் கணிசமாக கூடி இருக்கிறது. ஒரு கிலோ ஆப்பிள் ரூ.160க்கும், ஆரஞ்சு ரூ.80க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வியாபாரிகளும் படையெடுப்பதால், கோயம்பேடு சந்தை களைகட்டி காணப்படுகிறது.

மேலும் படிக்க : "10 நாட்கள் விநாயகர் சதுர்த்தி" : எளிமையாக எப்படி கொண்டாடலாம்?

வரத்து அதிகரிப்பு, பொ்துமக்கள் மகி்ழ்ச்சி :

அண்டை மாநிலங்களில் இருந்து பூக்கள், வாழை வரத்து அதிகமாக இருப்பதால், அவற்றை பொது மக்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கிறார்கள். மக்கள் அதிகமாக கூடி இருப்பதால், கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு இருக்கிறது.

==================