V.K. Sasikala announces the name of the party  google
தமிழ்நாடு

"அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்" : கட்சி பெயரை அறிவித்தார் சசிகலா : சின்னம் தென்னந்தோப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, அதன்படி அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தனது கட்சியின் பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்தார் .

Rohini

கட்சியின் பெயரை அறிவித்த சசிகலா

அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்" என்ற புதிய கட்சியின் பெயரை இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தார் .

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடும் நோக்கில் அண்மையில் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்தார்.

அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்"

அதன்படி கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் பெயரை விரைவில் அறிவிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்"என்று தனது புதிய கட்சின் பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்தார்

கட்சி சின்னம் அறிமுகம்

புதிய கட்சியின் பெயரை அறிவித்ததோடு மட்டுமல்லாமல் தனது சின்னத்தையும் அறிமுகப்படுத்தினார் .அதன்படி தென்னந்தோப்பு சின்னத்தில் கட்சி போட்டியிடும் என்றும் ,தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுவதாவும் அவர் தெரிவித்தார்.

அதிமுக ஏழைகளுக்காக உருவாக்கப்பட்டது -சசிகலா

எம்ஜிஆர் மக்களுக்காக ஒரு கட்சி ஏற்படுத்தினார். அதற்குக் காரணம் திமுக என்ற வீழ்த்துவதுதான். அதிமுக ஏழைகளுக்காக உருவாக்கப்பட்டதாகவும் தொண்டர் ஆரம்பித்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு பயணத்தை ஆரம்பித்தவர் எம்ஜிஆர்.

எம்ஜிஆரின் நிலை எனக்கு...

ஆனால், ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்பு எல்லாம் மாறிவிட்டதாகவும் இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று நான் கட்சிக்கொடி அறிமுகம் செய்தேன். எம்ஜிஆரை போல் எனக்கும் அந்த சூழல் வந்துள்ளதாகவும் கூறினார்.

நாங்கள் தனி மரம் இல்லை தோப்பு

மேலும் நங்கள் தனி மரமாக வரவில்லை மாறாக தோப்பாக வந்திருக்கிறோம் என்றும் தனது சின்னமான தென்னந்தோப்பு சின்னத்தை அறிவித்த பிறகு இவ்வாறு தெரிவித்தார்.

====