VKC election manifesto released: Anti-homicide law to be enacted, free education election promise  google
தமிழ்நாடு

விசிக தேர்தல் அறிக்கை : ஆணவக் கொலைகளுக்கு எதிர்ப்பு சட்டம் இயற்றப்படும், விலையில்லா கல்வி தேர்தல் வாக்குறுதி!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதியை விடுதலை சிறுத்தை கட்சி அறிவித்துள்ளது

Rohini

தமிழக சட்டப்பேரவை தேர்தல்

தமிழகத்திற்கு சட்டப்பேரவை தேர்தலானது வருகிற 23 ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த ணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் தேர்தல் வாக்குறுதியை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியும் தேர்தல் வாக்குறுதியை அறிவித்துள்ளது.

திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிக

இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சியானது போட்டியிடுகிறது.

8 தொகுதி, தனி சின்னத்தில் போட்டி

திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிக 8 தொகுதிகளில் தனி சின்னமான பானை சின்னத்தில் போட்டியிடுகிறது.

காட்டுமன்னார்கோயில் , செய்யூர் ,திண்டிவனம் போன்ற தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது.

காட்டுமன்னார் கோயிலில் பின்வாங்கிய திருமா

சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார் கோயிலில் தனித்து , போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார்.

தான் அங்கு போட்டியிடவில்லை அதற்கு பதிலாக ஜோதிமணி என்பவர் போட்டியிடுவர் என திருமா அறிவித்தார், இது அரசியில் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது குறிபிடத்தக்கது

விடுதலை சிறுத்தை கட்சியின் தேர்தல் அறிக்கை

இந்த நிலையில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சி அதன் தேர்தல் வாக்குறுதியை அறிவித்துள்ளது.

ஆணவ கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்றுதல்

மருத்துவத்தை அடிப்படை உரிமையாக மாற்றுதல்

விலையில்லா கல்வி வழங்குதல்

மக்கள் தொகைக்கேற்ப இடஒதுக்கீடு

மகளிருக்கு 50% இடஒதுக்கீடு

உழுபவருக்கு நிலம், இருப்பவருக்கு இடம்

தனியார் துறையிலும் இடஒதுக்கீடு மூலம் சமூக நீதியை உறுதி செய்தல்

சிறுபான்மையினரைக் காக்க சிறப்புச் சட்டம்

மது மற்றும் போதைப்பொருட்களை முழுமையாக ஒழித்தல்

இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடுதல்

இருமொழிக் கொள்கையை உறுதிப்படுத்துதல்

கடல், காடு, கனிம வளங்கள் அனைத்தும் மக்களுக்கே உரியவை என்ற கொள்கை

காவல் துறை மற்றும் சிறைத் துறையில் சீர்திருத்தம்

மேற்கண்ட அனைத்தையும் தேர்தல் வாக்குறுதிகளாக விடுதலை சிறுத்தை கட்சி அறிவித்துள்ளது.

==========