ANI
தமிழ்நாடு

லாக் - அப் டெத் : உயிரிழந்தவர் தீவிரவாதியா ? நீதிமன்றம் கேள்வி

காவல்துறை விசாரணையின் போது இளைஞர் உயிரிழந்த இளைஞர் தீவிரவாதியா என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

S Kavitha

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோவில் காவலாளியான அஜித் என்ற இளைஞரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது அந்த இளைஞர் உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்த நிலையில், காவல்துறையினர் தாக்கியதில் தான் அவர் உயிரிழந்தார் என்று புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. 6 காவலர்களை பணியிடை நீக்கம் செய்தார்.

இதனிடையே மதுரை கிளை நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரிப்பதாக தெரிவித்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது.விசாரணையின் போது நீதிபதிகள் , காவல் துறையினரிடையே அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

ஆயுதம் ஏந்தி தாக்கினால், தற்காப்புக்காக காவல் துறையினர் தாக்கலாம். ஆனால், உயிரிழந்த இளைஞர் தீவிரவாதியா? அல்லது ஆயுதம் ஏந்தி உங்களைத் தாக்கினாரா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சாதாரண நகை திருடுபோன சந்தேக வழக்கில், விசாரணை எனும் பெயரில் இளைஞரைத் தாக்கியது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 24 காவல் விசாரணை மரணங்கள் நடந்துள்ளதாகவும், விசாரணையின் போது நடக்கும் இந்த சட்ட விரோதமான காவல் மரணங்களை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் அவர்கள் கூறினர்.