Weather forecast: Chance of rain in Tamil Nadu for 6 days starting today  google
தமிழ்நாடு

வானிலை முன்னறிவிப்பு : தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Rohini

வானிலை முன்னறிவிப்பு

மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.

வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது

மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக இன்று (மே.11) முதல் மே.16ம் தேதி வரை 6 நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது

அதிக கனமழை பெறும் மாவட்டங்கள்

வானிலை மையம் அறிவிப்பின் படி ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும். மே.12ம் தேதி (நாளை) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது

கனமழை பெறும் மாவட்டங்கள்

இன்று ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும். மே.12ம் தேதி (நாளை) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது

சென்னைக்கு மழை

சென்னையை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுமம் என்றும் , நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் முதல் 27 டிகிரி செல்சியஸ் பதிவாக வாய்ப்புள்ளதும் தெரிவித்துள்ளது

கனமழை எச்சரிக்கை :மீனவர்கள் எச்சரிக்கை:

தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும்

அதனால் இன்று முதல் 14ம் தேதி வரை குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

============