https://x.com/ChennaiRmc?
தமிழ்நாடு

சென்னையில் பகலில் வெயில், இரவில் மழை : வானிலை மையம் கணிப்பு

சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், இரவில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kannan

தமிழக வானிலை நிலவரம் குறித்து கருத்து தெரிவித்த தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா ஹேமச்சந்திரன், மதுரை, சென்னை, ஈரோடு ஆகிய இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவானதாக தெரிவித்தார்.

வலுவான மேற்கு காற்றின் ஊருடுவல் காரணமாக வெப்பநிலை உயர்ந்து இருப்பதை சுட்டிக் காட்டிய அவர், கடல்காற்று நுழைய தாமதம் ஆவதால், கடலோர பகுதிகளில் அசௌகரியம் ஏற்படும் என்றார்.

சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்யும்.

பகலில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்தாலும், இரவில் இடி மின்னலுடன் மழை பெய்தால், குளிர்ச்சியான சூழல் நிலவும் என்று ஹேமச்சந்திரன் தெரிவித்தார்.

=====