Weather Update: Moderate rain likely to occur in Tamil Nadu till March 24 Here IMD IMD Weather Forecast google
தமிழ்நாடு

Weather Update ": தமிழகத்தில் மார்ச் 24 வரை மிதமான மழை வாய்ப்பு!

IMD Weather Forecast in Tamil Nadu : தமிழகத்தில் மார்ச் 24 வரை மிதமான மழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Rohini

வானிலை மையம் அறிவிப்பு

IMD Weather Forecast in Tamil Nadu : இதுகுறித்து அறிவித்துள்ள சென்னை வானிலை மையம் தமிழகத்தில் நாளை முதல் மார்ச் 24-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்

மன்னார் வளைகுடா முதல் வடக்கு உள் கர்நாடகம் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் தெரிவித்துளளது

லேசான மழைக்கு வாய்ப்பு

வானிலை குறித்து அறிவித்துள்ள சென்னை வானிலை மையம் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், 23, 24 தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.

25, 26 தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் 27-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது

வழக்கமான வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரும்

தமிழகத்தில் நாளை அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவிலும், 23, 24 தேதிகளில் இயல்பான வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரும் என்றும் அறிவித்துளளது

அதிகமான மழை பதிவு

அதன்படி இன்றைய நிலவரப்படி அதிகபட்ச மழை பதிவாக தமிழக்தில்

அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோடு, மாம்பழத்துறையாறு, அணைகெடங்கு ஆகிய இடங்களில் தலா 3 செமீ, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் மழை தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.