Weather Update: New low-pressure area formed; chance of heavy rain for Tamil Nadu. google
தமிழ்நாடு

வானிலை அப்டேட் : உருவானது புதிய காற்றுழுத்த தாழ்வு பகுதி, தமிழகத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு...!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Rohini

உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துத்துள்ளது

இது குறித்து வானிலை மையம் தெரிவித்துள்ள அறிவிப்பின்படி

வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா - மேற்கு வங்க கடலோர பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும்

கோவை மற்றும் அதனை ஒட்டியுள்ள மலைப்பகுதிகள் மழை பெறும்

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஜூலை 3) கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது

இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது

எதிர்வரும் நாட்களுக்கான மழை அறிவிப்பு

இது குறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளது படி 4-ம் தேதி கோவை, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

5, 6 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது

சென்னை வானிலையை பொறுத்த வரையில்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது

மீனவர்களுக்கான எச்சரிக்கை

புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், மத்திய வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும்,

இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால , அந்தமான் கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய வங்கக்கடலின் பெரும்பாலான பகுதிகளில் சூறாவளிக்காற்று அதிகபட்சமாக மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எச்சரிக்கை விடுத்துள்ளது

===================