North East Monsoon Period in Tamil Nadu 2025 Dates in Tamil 
தமிழ்நாடு

அடுத்த வாரம் வடகிழக்கு பருவமழை : அடித்து ஊற்றும் என கணிப்பு

North East Monsoon Period in Tamil Nadu 2025 Date : தமிழகத்தில் 17ம் தேதி வாக்கில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும், மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

Kannan

தமிழகத்தில் பரவலாக மழை

North East Monsoon Period in Tamil Nadu 2025 Date : தென்மேற்கு பருவமழை விடைபெற்ற நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருகிறது. காலை முதல் வெயில் வாட்டி வதைப்பதும் மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை பெய்வதுமாக உள்ளது. குறிப்பாக வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் மழைப்பொழிவை பெற்று வருகின்றன.

வடகிழக்கு பருவமழை

இந்நிலையில் தமிழகம் மற்றும் ஆந்திராவிற்கு அதிக மழை கொடுக்கக்கூடிய வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான தகவலை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்(Pradeep John Weatherman) வெளியிட்டு இருக்கிறார்.

17-19 க்குள் மழை தொடங்கும்

” கிருஷ்ணகிரி - ஈரோடு - திருப்பூர் - கரூர் - சேலம் - தர்மபுரி - திருவண்ணாமலை - நீலகிரி - வேலூர் - ராணிப்பேட்டை - மற்றும் அதை ஒட்டிய திருவள்ளூர் பகுதிகள் அனைத்தும் உட்புறங்களில் ஒருங்கிணைவுடன் இடைநிலைக் காற்று வீசும்.

இது மேற்கு திசையிலிருந்து மாறி அக்டோபர் 16 ஆம் தேதி வாக்கில் கிழக்கு திசைக்கு முற்றிலுமாக மாறும். அதன் அடிப்படையில் அக்டோபர் 17-19 வாக்கில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்(Northeast Monsoon 2025 Start Date) எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க : Southwest Monsoon : 5ம் தேதியோடு முடிகிறது: அக். வடகிழக்கு பருவமழை

சராசரி மழை கிடைக்கும்

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரியை ஒட்டியே இருக்கும் என்றும், ஒரு சில பகுதிகளில் கூடுதல் மழைப் பொழிவுக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.

--------------