What Tvk are saying is completely untrue: Vellore Police explanation!
20 மணி நேரத்திற்கு முன்பு அனுமதி-தவெகவினர் குற்றச்சாட்டு
கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு காவல்துறையிடம் அனுமதி பெற ஒன்றரை மாதங்களாக தாங்கள் போராடியதாகவும், ஆனால் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 20 மணி நேரத்திற்கு முன்புதான் அனுமதி வழங்கப்பட்டது எனவும் தவெகவினர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தனர்.
தவெகவினர் கூறுவது உண்மைக்கு புறம்பானது
இந்நிலையில் தவெகவினர் கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று வேலூர் காவல்துறை விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
வேலூர் காவல்துறை விளக்கம்
அந்த அறிக்கையில்,
”வேலூர் மாவட்டத்தின் தவெக கட்சி நிர்வாகிகள் தங்கள் கட்சியின் தலைவர் நிகழ்ச்சிக்காக கடந்த ஒன்றரை மாதங்களாக அனுமதி கோரி போராடியதாகவும், நிகழ்ச்சி தடைபெறுவதற்கு 20 மணி நேரத்திற்கு முன்புதான் அனுமதி கடிதம் கிடைத்ததாகவும், கடிதத்தை பார்த்த பிறகே அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தவெக கட்சி நிர்வாகிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பில்
தவெக கட்சி நிர்வாகிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது காவல் துறையினரிடம் அனுமதி பெற கடந்த ஒன்றரை மாதங்களாக போராடியதாகவும், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 20 மணி நேரத்திற்கு முன்பாகதான் காவல் துறையினரால் அனுமதி வழங்கப்பட்டது என கூறியது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
மேலும், தவெக கட்சியினர் அளித்த மனுவில் கோரப்பட்டபடி 4900 கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதி அளித்து செயல்முறை ஆணை வழங்கப்பட்டது.
ஆனால், இன்று 23.02.2026-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மணுவில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைக்கு மேலாக குறைந்தபட்சம் 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக தெரியவருகிறது.
விதிமுறைகளை மீறிய தவெக
இச்செயலானது மாண்பமை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணை எண்.05-ல் நிகழ்ச்சி நடத்துவதற்கு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளை மீறி செயல்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் காவல்துறை விளக்கம்
எனினும் காவல்துறையினரால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படா வண்ணம் உரிய ஏற்பாடுகள் செய்து பாதுகாப்பு வழங்கப்பட்டது” என்று வேலூர் காவல்துறை விளக்கமளித்துள்ளது.