Heated exchange between Udhayanidhi Stalin and Aadhav Arjuna in the Legislative Assembly!
சட்டப்பேரவையில் அவைக்குறிப்பு நீக்கம் மற்றும் கோப்புகள் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆதவ் அர்ஜுனா இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேச்சு
சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பேரவைத் தலைவர் அவையை சிறப்பாக வழிநடத்தினாலும், எதிர்க்கட்சிகளை விட ஆளும் கட்சியினருக்கே அதிக வாய்ப்பு தருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவைக்குறிப்பு நீக்கம் குறித்த விமர்சனம்
மேலும் ஆளும் கட்சியினர் ஆதாரமின்றி வைக்கும் குற்றச்சாட்டுகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது சமூக வலைதளங்களில் ரீல்ஸ்களாகப் பரவுவதால், அதை நீக்குவது அர்த்தமில்லாமல் போவதாக உதயநிதி பேரவைத் தலைவரின் கவனத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டுவந்தார்.
சட்டசபை விவாதமா? 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியா?
மேலும், பேரவை நிகழ்வுகளின் போது சிலர் பாட்டு பாடுவதைச் சுட்டிக்காட்டி, 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமோ என்ற சந்தேகம் வருவதாகவும் கூறினார்.
கோப்புகள் தொடர்பான கேள்வி
முதலமைச்சர் தனது மேஜையில் மூன்று கோப்புகள் இருப்பதாக கூறியதைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், அதை ஏன் உடனடியாகப் பார்க்கவில்லை என்றும், ஜோசியக்காரர் சொன்னால் தான் பார்ப்பாரா என்றும் கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில்
இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மிசாவை எதிர்கொண்ட திமுகவைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளதாகவும், அனைத்துத் துறைகளிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு தவறுகள் மீது ஆதாரத்துடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையே முதல்வர் குறிப்பிட வந்தார் என்றும் விளக்கம் அளித்தார்.
நேரலை குறித்த கேள்வி
தொடர்ந்து பேசிய அவர், 2021 தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி சட்டப்பேரவை நிகழ் முழுமையையும் ஏன் நேரலை செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
=====