whistle ban’ at T20 WC match in MA Chidambaram Stadium chepauk chennai  google
தமிழ்நாடு

சேப்பாக்கம் மைதானத்தில் ’விசிலுக்கு தடை’ : நிர்வாகத்தின் விளக்கம்

டி 20 உலககோப்பையானது சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் நிலையில் மைதானத்திற்குள் விசில் எடுத்த செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .

Rohini

விசில் கொண்டு செல்ல தடை

whistle ban’ at T20 WC match in MA Chidambaram Stadium chepauk chennai : சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தின் உள்ளே விசில் கொண்டுவர தடை விதிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் சலசலப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது .

எந்தெந்த பொருட்களுக்கு தடை

ஏற்கனவே மைதானத்திற்குள் வாட்டர் பாட்டில், பவர் பேங்க், குடை உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது அந்தப் பட்டியலில் விசிலும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விசில் விற்கவும் தடை

மேலும், மைதானத்தை சுற்றியுள்ள சாலையோர விற்பனைக் கடைகளிலும் விசில்களை விற்பனை செய்யக்கூடாது என காவல்துறை தரப்பில் இருந்து வலியுறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .

நிர்வாக தரப்பு தகவல்

மைதானத்திற்குள் விசில் எடுத்து செல்ல அனுமதி மறுப்பும் ,ஐசிசி அல்லது பிசிசிஐ தரப்பிற்கும் எந்த ஒரு சமந்தமும் இல்லை என்று சேப்பாக்கம் மைதான நிர்வாகம் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களுக்கு அதிர்ச்சி

ஐபிஎல் போட்டிகளின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்லோகனாக “விசில் போடு” பாடல் இருப்பதும் அந்த பாடல் மைதானத்திற்குள் பிளே செய்யப்படும் காரணத்தினால் விசிலை ரசிகர்கள் எடுத்து செல்வர்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ஆனால் மைதானத்திற்குள் விசில் கொண்டுவர தடை விதிக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ரசிகர்களிடையே சந்தேக கேள்வி

வரும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி முதல் முறையாக தேர்தலை எதிர்கொள்ளும் தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆணையத்தால் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது,

இந்தனை ஒட்டி மைதானத்திற்குள் விசில் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறதா என ரசிகர்களை கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.