white paper released by Minister Maria Wilson Tamil Nadu government's debt burden stands at Rs 13 lakh crore google
தமிழ்நாடு

தமிழக அரசின் வெள்ளை அறிக்கை : ”கடன் 13 லட்சம் கோடி, தனிநபர் சுமை 1.28 லட்சம்” : 34.8% வட்டிக்கு செல்கிறது...!

தமிழக அரசின் கடன் சுமை ரூ.13 லட்சம் கோடியாக இருப்பதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Kannan

தமிழகத்தில் தவெக ஆட்சி

2021 முதல் 2026 மே வரை தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய விஜயின் தமிழக வெற்றிக் கழகம், மற்ற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்து இருக்கிறது.

வெள்ளை அறிக்கை - முதல்வர் அறிவிப்பு

முதல்​வ​ராக ஆட்​சிப் பொறுப்​பேற்ற விஜய், நிதி​நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளி​யிடப்​படும் என்று கூறி​யிருந்​தார். அதன்​படி, வெள்ளை அறிக்​கையை நிதி​யமைச்​சர் மரிய வில்​சன், தலை​மைச் செயல​கத்​தில் வெளி​யிட்​டார்.

வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டு இருக்கும் முக்கிய அம்சங்களை பார்க்கலாம் :

* கரோனா பெருந்​தொற்​றுக்​குப் பிந்​தைய 2021-22 முதல் 2025-26 வரையி​லான ஐந்​தாண்டு காலக் கட்​டமே வெள்ளை அறிக்​கை​யின் மையப் பகுப்​பாய்​வு

எதிர்திசையில் தமிழக வளர்ச்சி

* கரோனா பெருந்​தொற்​றுக்​குப் பிந்​தைய மீட்​சிக் காலத்​தில் கர்​நாட​கா, மகா​ராஷ்டிரா போன்ற மாநிலங்​கள் தங்​களின் நிதி நிலை​யைச் சீரமைத்​துள்ள நிலை​யில், தமிழகத்​தின் வளர்ச்சி குறி​யீடு​கள் எதிர் திசை​யிலேயே நகர்ந்​துள்​ளன.

* தமிழகத்தில் ரூ.46,538 கோடி​யாக இருந்த வரு​வாய் பற்​றாக்​குறை கடந்த 5 ஆண்​டு​களில் ரூ.78,324 கோடி​யாக உயர்ந்​துள்​ளது.

* கரோனா பெருந்​தொற்று ஆண்டை விட​வும் வரலாறு காணாத உச்​சத்தை அடைந்​துள்​ளது.

* மாநில சொத்து வரி வரு​வாய் கடும் வீழ்ச்​சி​யைச் சந்​தித்​துள்​ளது.

* தற்போதைய நுகர்​வுச் செல​வு​களை ஈடு​கட்டவே மாநிலம் கடன் பெற்​றுள்​ளது என்​பதை இது காட்​டு​கிறது.

* தமிழகத்​தின் நிலு​வை​யில் உள்ள கடன் பொறுப்​பு​கள், 2021 ஏப்​.1-ம் தேதி முதல் 2026 மார்ச் 31-ம் தேதி வரை கடந்த 5 ஆண்​டு​களில் ரூ.5.13 லட்​சம் கோடி​யில் இருந்து ரூ.10 லட்​சம் கோடி​யாக உயர்ந்​துள்​ளது.

தனிநபர் கடன்சுமை ரூ.1,28,934

* தனிநபர் கடன் சுமை ரூ.1,28,934 ஆக உயர்ந்​துள்​ளது. இது மற்ற மாநிலங்​களை விட அதி​கம்.

*ஆண்டு வட்​டிச் சுமை​யானது 2021-22-ம் ஆண்​டில் ரூ.41,564 கோடி​யாக இருந்த நிலை​யில், 2025-26-ல் ரூ.67,050 கோடி​யாக உயர்ந்​துள்​ளது

34.8% வட்டிக்கே செல்கிறது

* மொத்த வரு​வாய் வரவு​களில் சுமார் 22.8 சதவீத​மும், மாநிலத்​தின் சொந்த வரி வரு​வா​யில் 34.8 சதவீதத்​துக்கு மேல் வட்டி செலுத்​து​வதற்கே செல்​கிறது.

* மாநிலத்​தின் நிதி நெருக்​கடிக்கு முக்​கியக் காரண​மாக வட்​டியே உள்​ளது.

ரூ.51,000 கோடி வருவாய் இழப்பு

* ஜிஎஸ்​டி, பெட்​ரோலிய வரிமற்​றும் மது​பான வரி போன்​றவற்​றில் முறை​யான மேலாண்மை இல்​லாத​தால் ஆண்​டுக்​கு ரூ.51,000 கோடி வரு​வாய் இழப்பு ஏற்​படு​கிறது.

* புதிய திட்​டங்​களுக்கு மூலதனச் செலவு வெறும் 11.8 சதவீதம் மட்​டுமே உள்​ளது.

மின்துறை கடன் ரூ.2.47 லட்சம் கோடி

* மின்துறை நிறு​வனங்​களின் கடன் மட்​டும் ரூ.2.47 லட்​சம் கோடி​யாக உள்​ளது.

போக்குவரத்துதுறை ரூ.72,667 கோடி கடன்

* போக்​கு​வரத்​துத் துறை​யில் ஒரு கி.மீ. செலவு ரூ.78.81 ஆகவும், வரு​வாய் ரூ.25.97 ஆகவும் உள்​ளது. அதன்​படி, போக்​கு​வரத்து துறை​யில் ரூ.72,667 கோடி இழப்பு ஏற்​பட்​டுள்​ளது.

மொத்த கடன்சுமை ரு.13.18 லட்சம் கோடி

* இவற்றையும் சேர்த்​துக் கணக்​கிடும் போது, மொத்த நிதிச்​சுமை ரூ.13.18 லட்​சம் கோடியை எட்​டு​கிறது.

* 2021 - 2026 ஆண்டு காலக் கட்​டத்​தில் ரூ.4.87 லட்​சம் கோடி கடன் பெறப்​பட்​டிருந்​தது.

60 ஆண்டுகளில் இல்லாத அளவு கடன்

* இந்த 5 ஆண்டு கால கடன், மாநிலம் தனது முதல் 60 ஆண்டு காலத்​தில் பெற்ற கடனை விட அதி​க​மாகும்.

* 2025-26-ம் ஆண்​டின் முதல் நிலை கணக்​கு​களின்​படி நிதிப் பற்​றாக்​குறை ரூ.1,33,208 கோடி​யாக​வும், மாநில மொத்த உள்​நாட்டு உற்​பத்தி 3.77 சதவீத​மாக​வும் உயர்ந்​துள்​ளது.

* இது இது​வரை பதி​வானவற்​றில், மிக உயர்ந்த நிதிப் பற்​றாக்​குறை​யாகும்.

வருவாய் திரட்டலை அதிகரிக்க வேண்டும்

* இந்த இக்​கட்​டான சூழலில் இருந்து மீள, வரு​வாய் திரட்​டு​வதை அதி​கரித்​தல், செல​வினங்​களை முறைப்​படுத்​துதல், பொதுத்​துறை நிறு​வனங்​களில் சீர்​திருத்​தம் மற்​றும் ஊழலற்ற நிர்​வாகம்​ அவசி​யம்​

என்று மரிய வில்சன் தாக்கல் செய்த வெள்​ளை அறிக்​கை பரிந்​துரைக்​கிறது.

=================