Who was behind the victory of the young minister of the TVK, Chandrababu Naidu, this keerthana  google
தமிழ்நாடு

தவெகவின் இளம் அமைச்சர் : சந்திரபாபு நாயுடுவின் வெற்றிக்கு பின்னால் இருந்தவர் : யார் இந்த கீர்த்தனா?

தமிழக வெற்றி கழகத்தின் சிவகாசி தொகுதி எம்எல்ஏ கீர்த்தானா சம்பத் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

Rohini

பெரும்பான்மையை வென்ற தமிழக வெற்றி கழகம்

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி வெற்றி கண்டது. இது தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது

ஆதரவு வழங்கிய கட்சிகள்

சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் நிலை இருந்த சூழலில் பெரும்பான்மையான நிரூப்பிக்க ஆளுநர் தரப்பு சொல்லியிருந்தது, இந்த நிலையில் 118 நிருப்பிக்க கூட்டணி கட்சிகளின் ஆதரவை தவெக நாடியிருந்தது .

ஆதரவளித்த ஐயூஎம்எல்

116 இடங்கள் கிடைத்து விட்ட நிலையில், இன்னும் இரண்டே இடங்கள் தான் தேவை. திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளிக்க முடியாது என்று கூறி வந்த நிலையில் இன்று ஐயூஎம்எல் ஆதரவை வழங்கியுள்ளது

காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் ஆதரவு

ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தவெகவிற்கு காங்கிரஸ் கை கொடுக்க 5 இடங்கள் கிடைத்தது. இரண்டு கம்யூனிஸ்டுகளும் தலா 2 சீட்களுடன் தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு தந்து இருக்கிறார்கள்.

ஆதரவு வழங்கிய காங்கிரஸ்

தவெக பெரும்பான்மை அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் , முதல் ஆதரவாக காங்கிரஸ் 5 இடங்களை வழங்கியது குறிபிபிடத்தக்கது

முதல்வரானார் விஜய்

120 பெருபான்மையோடு நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் , அவரோடு வெற்றி பெற்ற அமைச்சர்களும்

இளம் வயது அமைச்சர் கீர்த்தனா

கீர்த்தனா தீவிர அரசியலில் நுழைவதற்கு முன்பு, அரசியல் ஆலோசகராகவும் டிஜிட்டல் பிரச்சார உத்தியாளராகவும் பணியாற்றியவர்.

கீர்த்தனா 'Showtime Consulting' என்ற அரசியல் ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றியபோது, ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்காக பல்வேறு தேர்தல் பிரச்சார உத்திகளை வகுப்பதில் முக்கிய பங்காற்றினார்.

குறிப்பாக டிஜிட்டல் தளங்களில் அக்கட்சியின் செல்வாக்கை உயர்த்த தீவிரமாக தன்னை ஈடுபடித்திகொண்டவ்ர் , இதன் காரணமாக விஜய் தவெகவில் இனைய அழைப்பு விடுத்திருந்தார்

அரசியலில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்

அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுத்த கீர்த்தனா, பின்னாளில் நேரடியாகக் களமிறங்க முடிவு செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு, தனது 30 வயதிலேயே வெற்றி பெற்று முதல்முறையாக எம்எல்ஏ ஆகி உள்ளார்.

இது குறித்து அவர் கூறியது

அரசியல் களத்தில் வியூகங்களை வகுத்துக் கொடுத்த ஒருவர், இன்று அதே களத்தில் அமைச்சராகப் பொறுப்பேற்பது பெரிய மாற்றமாக அரசியல் களத்தில் பார்க்கப்படுகிறது. இதுபற்றி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த தவெக

எம்எல்ஏ கீர்த்தானா, " "எல்லாம் மாறப்போகிறது, அந்த மாற்றம் இதோ வந்துவிட்டது. தளபதி முதலமைச்சர் ஜோசப் விஜய் இங்கே இருக்கிறார்... ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்து, வேட்பாளராக வாய்ப்பு பெற்று, இன்று அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருப்பது என்பது வேறு எந்த மாநிலத்திலாவது எளிதான காரியமா? இல்லை. என்று தெரிவித்தார்

===========