Will Tamil Nadu women trust patchwork work? - Edappadi Palanisamy Question CM MK Stalin on Magalir Urimai Thogai 5000  Source : Google
தமிழ்நாடு

Patchwork வேலையை தமிழ்நாட்டு பெண்கள் நம்புவார்களா: எடப்பாடிகேள்வி?

EPS Criticized Stalin on Magalir Urimai Thogai : தேர்தல் தோல்வி பயம், பொம்மை முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Baala Murugan

எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவு

EPS Criticized MK Stalin on Magalir Urimai Thogai 5000 : எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 28 மாதங்களாக "1000 ரூபாய்" கொடுக்காமல் இழுத்து அடித்த ஸ்டாலின் அரசு, தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து "கோடைக்கால சிறப்புத் தொகை" கொடுக்கிறாராம்

தமிழ்நாட்டு பெண்கள் நம்பி விடுவார்களா

2024, 2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா திரு. @mkstalin அவர்களே, என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை சீர்குலைத்துவிட்டு, இப்போது "தேர்தல் நேரத்து பணம்" வரவு வைக்கும் இந்த "Patchwork" வேலையை தமிழ்நாட்டுப் பெண்கள் நம்பி விடுவார்களா என்ன என்று விமர்சித்துள்ளார்.

தேர்தல் பயத்தில் அறிவிப்பு வெளியில் வருகிறது

செப் 2023 முதல் இதுவரை உங்கள் அரசு கொடுத்த தொகை ரூ. 34,000, ஆனால் உங்கள் ஆட்சியால் ஒவ்வொரு குடும்பமும் இழந்த குறைந்தபட்சத் தொகையே "ரூ.3,50,000"! இதை #விடியாஆட்சி_வீட்டு Bill லே_சாட்சி என்று வீடு வீடாக சென்று @AIADMKOfficial அம்பலப் படுத்தி வருவதைக் கண்ட பயத்தில் வருவது தானே இந்த அறிவிப்பு என்று கேட்டுள்ளார். இப்போது "மாதம் 2000 ரூபாய்" என்று நான் அளித்த @AIADMKOfficial

தேர்தல் வாக்குறுதியைக் கண்டதும் , வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பயத்தில் ,இந்த அறிவிப்பு வெளியில் வருகிறது பாருங்கள் மக்களே என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சி அமைந்தவுடன் அமல்படுத்தப்படும்

யாரும், எந்தவொரு திட்டத்தையும் தடுக்காத போதிலும், நீங்களாக வந்து "ஐயையோ முடக்கப் பார்க்கிறார்கள்" என்று சொல்வதைப் பார்த்ததால் வேடிக்கையாக இருக்கிறது, என்று பதிவிட்டுள்ள அவர், "அனைத்து குடும்ப அட்டைக்கும்" என்று வாய்கிழிய அளித்த வாக்குறுதியை 5 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தகுதியானவர்களுக்கு மட்டும் என சொல்லி , 1 கோடி தமிழ்ப் பெண்களை நிராகரித்துள்ளீர்கள். தமிழக மக்களின் பேராதரவுடன் இன்னும் மூன்று மாதங்களுக்குள் அமையவுள்ள

@AIADMKOfficial ஆட்சியில், தமிழகப் பெண்களுக்கு "குல விளக்குத் திட்டம்" முலம் அனைத்து குடும்பத் தலைவிக்கும் "மாதம் ரூ.2000" என்று நான் அளித்த வாக்குறுதியானது, கழக ஆட்சி அமைந்தவுடன் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.