Women's entitlement: Rs 1000 received, when will it be 2500? People are waiting in anticipation  google
தமிழ்நாடு

மகளிர் உரிமைத்தொகை : ரூ 1000 வரவு, ரூ. 2500 எப்போது ? எதிர்பார்ப்பில் மக்கள்....

1000 ரூபாயை உரிமைத் தொகை திட்டத்தை சீரமைப்பு செய்து , 2500 வழங்க கால அவகாசம் வேண்டும் தமிழக அரசு கோரியுள்ளது.

Rohini

ஆட்சியை கைப்பற்றிய விஜய்

னட்ந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றீ கழகம் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றுக்கொண்டார் .

தவெக வாக்குறுதி

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றிபெற்றால் 2500 மாதம் மகளிர் உரிமைதொகையாக வழங்கப்படும் என விஜய் வாக்குறுத்தி அளித்திருந்தார் .

இந்த நிலையில் 1000 ரூபாய் உரிமைத்தொகையை மறுசீரமைப்பு செய்து 2500 ஆக வழங்க கால அவகாசம் தேவை என்று முதல்வர் விஜய் கேட்டுக் கொண்டார்.

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

தமிழ்நாட்டில் கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களில் ஒன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.

இந்தத் திட்டத்தை தற்போது அமைந்துள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு தொடருமா என்ற கேள்வியே முதலில் இருந்த நிலையில் , வாக்குறுதியாக அறிவித்த 2500 ரூ உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

இது குறித்து ஸ்டாலின் தனது சமூக வளைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க? திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேற்றுதானே சட்டப்பேரவையிலயே சொன்னீங்க?

மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?" என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

வரவு வைக்கப்பட்டஉரிமைத்தொகை

அறிவித்தப்படி மகளிர் உரிமைத்தொகையான 1000 ரூபாய் மட்டுமெ வரவு வைக்கப்பட்டுள்ளது .அதைப்போல கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் உதவிதொகையாக 1000 ரூ வரவு வைக்கப்பட்டுள்ளது. .

2500 வரவு எப்போது ? எதிர்பார்பில் மக்கள்

ரூ1000 மகளிர் உரிமைத்தொகையாக வரவு வைக்கப்பட்டிருக்கும் நிலையில் , தவெக வாக்குறுதியாக அறிவித்த ரூ. 2500 எப்போதும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்து வருகிறது.

==============