திமுக கூட்டணி
workers are in despair as the MDMK has been allotted only 4 seats in the DMK alliance ; சட்டமன்ற தேர்தலை திமுக 26 கட்சிகளின் கூட்டணியுடன் சந்திக்கிறது. திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவையும் ஒதுக்கப்பட்டது.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக குழு குழு நடத்தி வருகிறது. ஒவ்வொரு கட்சியுடனும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மதிமுக நிர்வாகிகளுடன், திமுக குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அண்ணா அறிவாலயத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
2021ல் ஆறு தொகுதிகள்
2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆறு தொகுதிகளிலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, நான்கு இடங்களில் வெற்றி பெற்றது.
2026ல் நான்கு தொகுதிகள்
இந்தமுறை திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்து இருப்பதால், அதற்கு ஏற்றவாறு, தொகுதிகளை ஒதுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, மதிமுகவுக்கு இந்தமுறை நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
உதயசூரியன் சின்னத்தில் போட்டி
நான்கு தொகுதிகளில், மூன்றில் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்திலும் மதிமுக போட்டியிடும். அவர்களின் கட்சி சின்னமான பம்பரம் கிடைக்க வாய்ப்பில்லை.
மதிமுகவிற்கு தொகுதிகள் குறைக்கப்பட்ட நிலையில், சிபிஐ, சிபிஎம், தேமுதிக மற்றும் விசிக ஆகிய கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
====