மாரிதாஸ் கைது :
YouTuber Maridhas Malaichamy Release Video on Karur Stampede : நீதிமன்றத்தில் திமுக கும்பல் நடத்திய மொத்த நாடகத்தின் விவரம் வீடியோவாக வெளியிடப்படும் உள்ளிட்ட பல்வேறு டுவீட் செய்த யூடியூபர் மாரிதாஸ் மலைச்சாமி காவல்துறை விசாரணைக்கு பின் வெளியிட்ட பகிரங்க வீடியோ.
யார் இந்த மாரிதாஸ் :
மாரிதாஸ் ஆன்ஷர்(Maridhas Answers YouTube Channel) என்று தனக்கென தனி யூடியூப் பக்கம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், உள்ளிட்ட பக்கங்களை தொடங்கி இன்று அரசியல் பற்றி பேசி மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று வருகிறார். இவர் வழக்கம் போல் அரசியல், சமூக கருத்துக்கள் உள்ளிட்டவைகளை வெளியிடுவது உண்டு. அதுபோல், சில நாட்களுக்கு முன் அரங்கேறிய தவெக கரூர் பரப்புரை இறப்பு குறித்து பேசி, வீடியோ(YouTuber Maridhas on Karur Death) ஒன்றை வெளியிட்டார்.
மாரிதாஸ் விசாரணை :
தவெக விஜய் பிரச்சார இறப்பு குறித்து வீடியோ வெளியிட்ட மாரிதாஸ் மலைச்சாமி அதற்கு முன்னதாக தனது எக்ஸ் பக்கத்தில் நீதிமன்றத்தில் திமுக கும்பல் நடத்திய மொத்த நாடகத்தின் விவரம் வீடியோவாக வெளியிடப்படும், 10 ரூபாய் பாலாஜி மற்றும் திமுக நடத்திய நாடகத்தின் ஃபார்முலா என சில கருத்துகளை பதிவிட்டார். இதற்கு பலரும் ஆதரவும், விமர்சனங்களையும் தெரிவித்து வந்த நிலையில், பதிவு வெளியான ஒரு மணி நேரத்தில் காவல்துறை, நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று எந்த வித முறையான ஆவணமும், சட்டப்பாடியான காரணமும் இன்றி அவரை விசாரணைக்கு(YouTuber Maridhar Arrest) அழைத்து உள்ளனர்.
மீண்டும் வீடு திரும்பிய மாரிதாஸ் :
மூவர் சீருடையிலும், மூவர் சாதாரண உடையிலும் அவரது வீட்டிற்கு வந்த 6 காவலர்கள் விசாரணை செய்ய காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். சட்டத்திற்கு புறம்பாக அழைத்தாலும், மாரிதாஸ் ஒத்துழைப்பு நல்கி அவர்களுடன் சென்றுள்ளார். அப்பொழுது, மாரிதாஸ் வீட்டு காவலாளியிடம் நீலாங்கரை காவல்நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளனர். மீண்டும் சட்டத்திற்கு புறம்பாக அவரது அலைபேசியை வாங்கி, டேட்டா உள்ளிட்டவற்றை ஆஃப் செய்து அழைத்து சென்றுள்ளனர். முன்னதாகவே இப்படி விசாரணைக்கு என அழைத்து கைது செய்யப்பட்ட நிலையில், நிலைமை அறிந்த மாரிதாஸ் வழக்கறிஞர்கள், கமிஷனர், டிஜிபி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். பின்னர் உள்ளே உள்ள ஒருவர்மூலம் மடிப்பாக்கம் காவல் நிலையம் என்பதைத் தெரிந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களின் நகர்வுகளை தெரிந்து கொண்டு, அதேசமயம் மாரிதாஸ் அவர்களிடம் இருந்து மடிப்பாக்கம் காவல் நிலைய தொலைபேசிமூலம் மனைவியையும் வழக்கறிஞர்களையும் தொடர்புகொண்டு உடனே அனுப்பிவிடுவார்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது. பின்னர், ஒரு மணி நேரத்திற்கு பின் மாரிதாஸ் வீட்டிற்கு வந்துள்ளார்.
வீடியோ வெளியிட்ட மாரிதாஸ் :
விசாரணைக்கு பின் வீடு திரும்பிய மாரிதாஸ், மேலும் நடந்தவற்றை கூறி நீதியரசர் தனது சொந்த கருத்தை சொல்கிறார், எந்த சட்டத்தில் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த மாரிதாஸ்(Maridhas Video) என்னை கைது செய்தாலும், நான் இதை சொல்வேன் என்றும், அவர் விசாரணைக் செல்வதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோவையும் இத்துடன் இணைத்து வெளியிட்டுள்ளார். இவருக்கு தொடர்ந்து அடுத்த நெருக்கடி வருமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தொடர் கேள்வியில் நெட்டிசன்கள் :
இதே விவகாரம் தொடர்பாக சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் ரெட்பிக்ஸ் எனும் யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் என்பவரையும் கைது செய்தனர். கரூர் விவகாரத்தில் சரி , தவறு ஆராயமலும் திமுக அரசு அரசியல் பிரச்சாரம் செய்துள்ளது என்று விமர்சித்து வரும் நெட்டிசன்கள் மேலும், இதுகுறித்து வீடியோ வெளியிட்டு தவெக தரப்பில் யாரும் இல்லாமல் முடிவு எடுத்தது, தவெகவுக்கு நடந்த அநீதி என்று கூறிய மாரிதாஸை அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும் படிக்க : Karur Stampede Death : விஜய், தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
இதைத்தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திமுக அரசின் நாடக நிலைமை அம்பலாமாகியுள்ளது என சமூக ஆர்வலர்கள் வருத்தெடுத்து வருகின்றனர். யூடியூபர் பெலிக்ஸ் அலுவலகத்தில் குண்டு வைத்துள்ளதாக தகவல் கிடைத்தது என காவல்துறையினர் அவரது அலுவலகத்தை ஆய்வு செய்ய வருவதாக அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.