zero marks for the budget: ; where are the promises? Udhayanidhi condemns  google
தமிழ்நாடு

”பட்ஜெட்டுக்கு பூஜ்ஜியம் மார்க்” : பள்ளி, உயர்கல்வி துறைக்கான நிதிகுறைப்பு : வாக்குறுதிகள் எங்கே ?, உதயநிதி கண்டனம்..!

தவெக அரசின் முதல் பட்ஜெட்டானது இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லப்பட்டவை எங்கே என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

Rohini

தவெக அரசின் முதல் பட்ஜெட்

தமிழக வெற்றி கழகம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகுபிறகு, முதல் பட்ஜெட் கூட்டத்தொடரானது இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

நிதியமைச்சர் மரிய வில்சன் அவர்களால் தமிழக அரசின் பட்ஜெட்டானது தாக்கல் செய்யப்பட்டது , 2 மணி நேரத்திற்கும் மேலாக பட்ஜெட் உரையை வாசித்து , பல அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்

பட்ஜெட் தாக்கல் ; எதிர்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்

தவெக அரசின் முதல் பட்ஜெட்டானது இன்று தாக்க்ல் செய்யப்பட்ட நிலையில் ,அதில் பள்ளி மற்றும் உயர்கல்வி துறைக்கான நிதியானது குறைக்கப்பட்டதிற்கு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாளின் கண்டனங்களை தெரிவித்திருக்கிறார் ,

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது ,100 நாட்களில் தவெக அரசுக்கு பூஜ்ஜியம்தான் மதிப்பெண்ணாக வழங்க முடியும்.

பட்ஜெட்டுக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண்தான். வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்? என்ற கேள்விக்கும் தவெக அரசிடம் பதில் இல்லை என்று தவெகவின் முதல் பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ளார்

ஸ்டிக்கர் ஒட்டிய தவெக அரசு

திமுக கொண்டுவந்த திட்டங்களின் பெயரை மட்டும் மாற்றம் செய்து , ஸ்ட்டிக்கர் ஒட்டியுள்ளது , உதயநிதி கண்டனம்

பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடன் பேசிய உதயநிதி ஸ்டாலின் ,மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில் பெயர் மாற்றம் மட்டுமே நடந்துள்ளது. திமுக அரசின் திட்டங்களுக்கு தவெக ஸ்டிக்கர் ஒட்டி அறிவித்துள்ளது என்று விமர்சித்துள்ளார்

திமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து அறிவித்திருக்கிறது தவெக

உதயநிதி ஸ்டாலின் கூறும்போது , திமுக ஆட்சியில் கொண்டு வந்த அன்பு சோலை' என நாங்கள் கொண்டு வந்த திட்டத்துக்கு `முதியோர் பொழுதுபோக்கு மையங்கள்' என்றும் `உலகம் உங்கள் கையில்' என்ற லேப்டாப் திட்டத்துக்கு `வெற்றி மடிக்கணினி திட்டம்' என்றும் `

கலைஞர் கனவு இல்லம்' திட்டத்துக்கு `வெற்றி வீடு திட்டம்' என்றும் `முதல்வர் படிப்பகங்கள்' திட்டத்துக்கு `டிஜிட்டல் நூலகம்' என்றும் `நன்னிலம்' திட்டத்துக்கு `மண்ணின் மகள் திட்டம்’ என்றும் பெயரை மாற்றியிருக்கிறார்கள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்திய திட்டங்களையே பெயர் மாற்றி அறிவித்துள்ளார்கள் இதுதான் மாற்றமா என்று தவெக அரசின் முதல் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்

காவல் மரணங்கள், ஆணவக் கொலைகளை கண்டுகொள்ளாத அரசு

மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவெக அரசுக்கு தைரியம் இல்லை. சட்டமன்றத்தில் பட்ஜெட் குறித்து கேள்வி கேட்பதை தடுக்கவே என்னை கைது செய்து அலைக்கழிப்பு செய்தனர்.

தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, கடந்த 5 வாரங்களில் 4 காவல் மரணங்கள் நடந்துள்ளன. ஜாதி ஆணவக் கொலைகள் நட்டதுள்ளன அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் இந்த அரசு இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்

தாய்மாமன் தங்க மோதிர திட்டம் குறித்து விமர்சன்ம் செய்த உதயநிதி

தவெக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வாக்குறுதியில் சொன்னபடி நிறைவேற்றப்படவில்லை. தமிழ்நாட்டில் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் தருவதாக முதல்வர் தேர்தல் பிரசாரத்தில் சொன்னார்.

ஆனால் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறி தவெக அரசின் முதல் பட்ஜெட் குறித்து விமர்சனம் செய்துள்ளார்

-==============================