சட்டப்பேரவை: முதல்வர் விஜய் செய்த சைகை, மரபை மீறிய செயல் அல்ல: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் பதில்
முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரை அளிக்கையில் திமுக மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து சைகையாக சிலவற்றை செய்திருந்தார்
முதல்வர் உரை , வெளிநட்ப்பு செய்த திமுக
ஆளுநர் உரையின் மீதான விவாதம் , சட்டப்பேரவையில் நடந்து வந்தது ,இதில் இறுதி உரையான முதலவர் உரையில் , திமுக ஆட்சியில் மதுபான் ஊழல் குறித்தும் அதன் முறைக்கேடுகள் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தார்,
இந்த விமர்சனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து அவை வெளிநடப்பு செய்து வெளியேறினர்
சைகையுடன் உரையை நிறைவு செய்த விஜய்
இதன்பின்னர் தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், தனது உரையை முடிக்கும்போது, முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் பிரபலமான சைகையைச் செய்து தனது உரையை நிறைவு செய்தார்
ஆரவாரம் செய்த ஆளும் கட்சியினர்
முதல்வரின் கையசத்து சைகை செய்ததை அமர்ந்திருந்த ஆளும் கட்சி அமைச்சர்கள் அனைவரும் , கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதிலும் பேரவைத் தலைவரிடம் அனுமதி பெற்று, அவரும் சரி சென்று சொல்ல, முதல்வர் அந்த சைகையை செய்து காட்டினார்.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
இந்நிலையில் அவை மரபை முதல்வர் மீறியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர் ,மேலும் சமூக வளைத்தளங்களிலும் பேசுப்பொருளாகி வருகிறது
பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர்
ஆளுநர் உரையின் மீதான விவாதத்தின் போது , பேசிய முதல்வர் விஜய் முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் பிரபலமான சைகையைச் செய்து தனது உரையை நிறைவு செய்தார்,
இது செயல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் , இது குறித்து அவைத்தலைவர் ஜே,சி,டி பிரபாகர், "நடந்தது எதுவும் அவை மீறியது அல்ல" என்று கூறியுள்ளார்
தேர்தலுக்கு முன்பாக திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவுற்றபோது, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் செய்த செய்கை, இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.