OPPO Reno 15C 5G Launch Date in India : சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ தற்போது இந்திய சந்தையில் ஒப்போ ரெனோ 15c ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒப்போ ரெனோ சீரிஸ் வரிசையில் தற்போது வெளிவந்துள்ள ஒப்போ ரெனோ 15c- யின் புதிய அம்சங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் ஒப்போ ரெனோ 15c மாடலின் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
ஒப்போ ரெனோ 15c கேமரா சிறப்பு அம்சங்கள்
6.57 இன்ச் AMOLED மற்றும் ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடனான எம்பி மெயின் கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமராவுடனான ட்ரிபில் ரியர் கேமரா சிஸ்டத்துடன் பின்பக்கத்தில் 50+2+2 மெகா பிக்சல் கொண்ட மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது. மேலும் 4k வீடியோ ரெக்கார்டிங் மற்றும் டிராவல் போட்டோகிராஃபியின் AI சப்போர்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
செல்ஃபி கேமரா 50 மெகா பிக்சல்களைக் கொண்டுள்ளது.
AI யின் சிறப்பம்சங்கள் ஏராளமாக உள்ளது. நைட் போட்டோகிராஃபி அவுட்புட் கொடுப்பதற்காக ஏஐ போட்டோகிராஃபி 2.0 மற்றும் டல்லாக இருக்கும் போட்டோவை பிரகாசமாக்க போர்ட்ராய்டு க்ளோவ், ஃப்ளாஸ் லைட், ரிம் லைட், நேச்சுரல் லைட் முதலான அம்சங்களும் இடம்பெற்றுள்ளது.
முக்கிய அம்சமே பேட்டரி தான்
ஒப்போ ரெனோ 15c மாடலின் முக்கிய அம்சமே அதன் பேட்டரிதான். ஏனென்றால் 7,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதனால் 80 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்டும் கிடைக்கிறது.
ரேம் மற்றும் நெட்வொர்க் அம்சங்கள்
8ஜிபி / 12 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 5ஜி நெட்வொர்க் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் யுஎச்பி டைப்-சி போர்ட் உள்ளது.
எந்தெந்த வண்ணங்களில் கிடைக்கும்
ஒப்போ ரெனோ 15c மாடல் 2 வண்ணங்களில் கிடைக்கிறது. ஒன்று ஆப்டர் க்ளோ பிங்க் மற்றொன்று ட்வைலைட் ப்ளூ.
விலை எவ்வளவு தெரியுமா?
ஒப்போ ரெனோவின் 15c மாடலின் தொடக்க விலை ரூ. 34,999ல் தொடங்குகிறது. 8ஜிபி ரேம்+256 மெமரி வேரியண்டின் விலையானது ரூ. 34,999 ஆகவும் 12ஜிபி ரேம்+ 256 மெமரி வேரியண்டின் விலையானது ரூ. 37,999ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.