Tamil enters the gaming world—'Son of Thanjai' is coming soon, featuring dialogues by Madhan Karky.  google
தொழில்நுட்பம்

கேமிங் உலகில் நுழையும் "தமிழ்" விரைவில் Son of Thanjai'. மதன் கார்க்கி வசனத்தில் வெளிவருகிறது.!

சென்னையை மையமாக கொண்ட ஸ்டூடியோவான அயலெட் ஸ்டூடியோஸால் உருவாக்கப்பட்ட `Son of Thanjai' என்ற விளையாட்டு Xbox Series X|S மற்றும் PS5 தளங்களில் வெளிவரவுள்ளது

Rohini

கேமிங் உலகில் தமிழ் மொழி

கேமிங் உலகிற்குள் தமிழ் மொழியில் முதன்முறையாக் `Son of Thanjai' என்ற பெயரில் அறிமுகமாகவுள்ளது . இதன் மூலம் உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் எளிதாக இந்த தமிழ்மொழி கேமிஅ பயன்படுத்தி விளையாடிக்கொள்ளலாம்

கேமில் தமிழ் வசனம்

தமிழில் அறிமுகமாகியுள்ள `Son of Thanjai' விளையாட்டின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களை, தமிழ்த் திரையுலகில் மிகவும் கொண்டாடப்படும் எழுத்தாளர்களில் ஒருவரான கவிஞர் மதன் கார்க்கி எழுதியுள்ளாரர் என்று தெரிவிக்கப்படுள்ளது

கேமிங் உலகில் காலெடுத்து வைக்கும் மதன்கார்க்கி

தமிழில் , திரைபடம் , பாடல் என தமிழ் உலகில் சிறந்த எழுத்தாளராக பார்க்கப்படுவர் மதன் கார்க்கி குறிப்பாக எந்திரன்,பாகுபலி’ போன்ற வெற்றிப் படங்கள் உள்பட 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கான பணி புரிந்து உள்ளார் மதன் கார்க்கி,

தற்போது இந்த கேமிங் மூலம் , கேமிங் உலகில் அடி எடுத்து வைத்துள்ளார்.

கேமின் கதை களம்

அரண்மனையில் உல்லாசமாக வாழும் சோழ இளவரசன் விண்ணேந்திரனின் தந்தை மரணப் படுக்கையில் இருக்க, எதிரிகள் நெருங்கி வர, அரசு வீழ்ச்சியின் விளிம்பில் நிற்கிறது.

இந்தச் சூழலில் தன் மகனை சாதாரண மனிதனாக சமூகத்துக்குள் அனுப்பும் ஒரு கடினமான முடிவை எடுக்கிறார் மன்னர்.

அங்கு இந்த இளவரசன், உழவர்கள், வணிகர்கள் மற்றும் மக்களின் நம்பிக்கையை வென்ற பிறகே அவர்களை நாட்டை ஆள முடியும். இதன் பின் என்ன ஆகிறது என்பதே இந்த கேமின் கதை களமாக அமைக்கின்றது

கேமிங்கில் முதன் முறையாக தமிழ்

இந்த கேம், தமிழ் மற்றும் ஆங்கில வசன வரிகளுடன் வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது முதல்முறையாக, உலகெங்கிலும் உள்ள விளையாட்டாளர்கள் முழுக்க முழுக்க தமிழில் பேசப்படும் ஒரு கேமாகவே இது அமைய இருக்கிறது

அயலெட் ஸ்டூடியோவால் உருவாக்கப்பட்ட கேம்

கேமிங் வரலாற்றில் முதன் முறையாக தமிழில் உருவாக்கம் செய்யப்பட்ட இந்த கேமிங்கை சென்னையில் உள்ள அயலெட் ஸ்டூடியோஸின் 30 பேர் கொண்ட குழு உருவாக்கியுள்ளது

இந்த முழுக்க முழுக்க சோழ காலத்தின் நெல் வயல்கள், கடலோரத் துறைமுகங்கள், அடர்ந்த காடுகள் மற்றும் வறண்ட எல்லைப் பகுதிகளை மீள் உருவாக்கம் செய்யும் வகையிலே உருவாக்கப்பட்டுள்ளது

========================