புகழ்பெற்ற கால்பந்து உலக கோப்பை
உலக புகழ்பெற்ற ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையானது வரும் 11-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ம் தேதி வரை கோலாகலமாக நடைப்பெற உள்ளது .
ஒலிம்பிக் போட்டிகளைப் போலவே மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் போட்டிகளில் இது முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகக் உலகளவில் கவனமும் ஈர்பும் பெற்று வருகிறது
வரலாற்றில் முதன் முறை 48 அணிகள் பங்கேற்பு
வரலாற்றில் முதன்முறையாக 32 அணிகளுக்குப் பதிலாக மொத்தம் 48 அணிகள் பங்கேற்கின்றன .குறிப்பாக இந்த உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவை அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
போட்டி நடைப்பெறும் அட்டவணை
இந்த புகழ் பெற்ற உலக கால்பந்து கோப்பையானது ,3 நாடுகளில் மொத்தம் 16 மைதானங்களில் போட்டி நடைபெற இருக்கிறது ,போட்டிகள் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணி, அதிகாலை 3.30 மணி, காலை 6.30 மணி, 9.30 மணி ஆகிய நேரங்களில் நடைபெறுகிறது என்றும்
குரூப் சுற்றின் முடிவில், ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 2 இடங்கள் பிடிக்கும் அணிகள் மற்றும் குரூப் வாரியாக 3-ம் இடம் பெறும் 8 அணிகளும் அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் 32) தகுதி பெறும். அதன்பின்னர் கால், அரை, இறுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது
16 நகரம் 104 ஆட்டங்கள், பிரம்மாண்டமான ஏற்பாடு
இந்த உலக கோப்பையானது ,மொத்தம் 104 ஆட்டம், 16 நகரங்களில் மிக பிரமாண்டமாக அமைந்துள்ள மைதானங்களில் விளையாடப்படவுள்ளன. இறுதிப் போட்டி, ஈஸ்ட் ருதர்ஃபோர்டில் அமைந்துள்ள ‘மெட்லைஃப் ஸ்டேடியத்தில்’ நடைபெற இருபதாகவும் ,
இத்தொடர் 16 வெவ்வேறு நகரங்களில் அமைந்துள்ள 16 மைதானங்களில் நடைபெறவுள்ளது. ருதர்ஃபோர்டில் அமைந்துள்ள மெட்லைஃப் மைதானம் 82,500 பார்வையாளர்கள் அமரும் திறன் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
குரூப்பில் இடம்பெற்றுள்ள அணிகள் விவரம்
குரூப் ‘ஏ’: மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, செக் குடியரசு
குரூப் ‘பி‘: கனடா, போஸ்னியா & ஹெர்சகோவினா, கத்தார், சுவிட்சர்லாந்து
குரூப் ‘சி’: பிரேசில், மொராக்கோ, ஹைதி, ஸ்காட்லாந்து
குரூப் ‘டி’: அமெரிக்கா, பராகுவே, ஆஸ்திரேலியா, துருக்கி
குரூப் ‘இ‘: ஜெர்மனி, குராசாவோ, ஐவரி கோஸ்ட், ஈக்வேடார்
குரூப் ‘எஃப்: நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன், துனிசியா
குரூப் ‘ஜி’: பெல்ஜியம், எகிப்து, ஈரான், நியூஸிலாந்து
குரூப் ‘ஹெச்’: ஸ்பெயின், கேப் வெர்டே, சவுதி அரேபியா, உருகுவே
குரூப் ‘ஐ’: பிரான்ஸ், செனகல், ஈராக், நார்வே
குரூப் ‘ஜே’: அர்ஜெண்டினா, அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டான்
குரூப் ‘கே’: போர்ச்சுகல், காங்கோ, உஸ்பெகிஸ்தான், கொலம்பியா
குரூப் ‘எல்’: இங்கிலாந்து, குரோஷியா, கானா, பனாமா
நேரடி ஒளிப்பரப்பு
பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரை இந்தியாவில் ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஒளிபரப்புகிறது.இதற்கான ஒப்பந்தமும் இறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
=====================