4 Moons in Russia Four moons appeared in sky find out the reason here in Tamil Source : Google
உலகம்

வானில் தோன்றிய 4 நிலவுகள் : காரணம் இதுதான் தெரிஞ்சுக்கோங்க!

4 Moons in Russia : ரஷியாவில் வானில் ஒரே நேரத்தில் 4 நிலவுகள் தோன்றிய நிலையில், அப்பகுதியில் மக்கள் ஆரவாரத்துடன் அக்காட்சியை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Baala Murugan

வாண்வெளி அதிசயம்

4 Moons in Russia : உலகில் இருக்கும் அனைவரும் ஒன்று என்பதை நிரூபிக்கும் வகையில், உலகில் ஒவ்வொருவருக்கும் உணர்த்தி கொண்டிருக்கிறது நமக்கு மேலே அதாவது, நம் தலைக்கும் மேல் இருக்கும் நீல நிற மேகம்.

அப்படி, அந்த வானம், மேகம் என்று குறிப்பிடும் ஆகாயத்திற்கு மேல் என்ன இருக்கிறது, என்ற கேள்வியும் அதற்கு கிடைக்கும் பதில்களுடன் சேர்ந்து விண்வெளியில் நடக்கும் அதிசயங்களும் நம்மை ஆச்சரியப்படுத்தும்.

ஒரே நேரத்தில் பல சந்திரன்

இந்நிலையில், ஒவ்வொரு முறையும், ஏதோ ஒரு நிகழ்வு அதாவது சூரியன் அல்லது சந்திரன் வெளியில் தெரிவது, வானவில் என நாம் நினைத்து பார்க்க முடியாதவைகள் எல்லாம், புதிதாக தோன்றி நம்மை திகைப்புற செய்யும்.

வானில் தோன்றிய நான்கு நிலவுகள்

அந்த வரிசையில் தற்போது ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று முன்தினம் இரவு வானில் ஒரே நேரத்தில் 4 நிலவுகள் தோன்றுவது போன்ற காட்சி தென்பட்டது. இதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர்.

சமூக வலைதளங்களில் வைரல்

இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. விண்வெளியில் ஒரே ஒரு நிலவு மட்டுமே இருக்கும் நிலையில், 4 நிலவுகள் தெரிந்தது ஒரு மாயத்தோற்றம் என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள். இத்தகைய நிகழ்வு பாரசெலீன் அல்லது மூன் டாக் என அழைக்கப்படுகிறது.

வானில் இருப்பதை போல் தோன்றும் நிலவுகள்

இது ஒரு வானியல் நிகழ்வு அல்ல, மாறாக வளிமண்டலத்தில் ஏற்படும் ஒளியியல் மாற்றமாகும். பூமியின் வளிமண்டலத்தில் மிக உயரத்தில் உள்ள மேகங்களில் அறுகோண வடிவத்திலான சிறிய பனிப் படிகங்கள் இருக்கும்.

நிலவொளி இந்த பனிப் படிகங்கள் வழியாக ஊடுருவிச் செல்லும்போது, அந்தப் படிகங்கள் ஒரு சிறிய 'பிரிசம்' போல செயல்பட்டு ஒளியை வளைக்கின்றன.

இவ்வாறு வளையும் ஒளியினால், உண்மையான நிலவிற்கு இருபுறமும் பிரகாசமான ஒளிப்புள்ளிகள் தோன்றுகின்றன.

மாயத் தோற்றம்

இது பார்ப்பதற்கு வானில் பல நிலவுகள் இருப்பது போன்ற மாயையை உருவாக்குகிறது என வானிலை அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

குளிர் நாடுகளில் இது நிகழும்

இத்தகைய நிகழ்வுகள் ரஷ்யா போன்ற கடும் குளிர் நிலவும் பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன, இந்நிலையில், இந்த காட்சிய அப்பகுதியில் இருந்து மக்கள கண்டு களித்து, புகைப்படும் மற்றும் காணொளியாக பதிவு செய்து, சமூக வலைதளத்தில் ஷேர் செய்து மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.