"$48 Billion Investment": Amazon CEO Meets PM Modi  source: Pm Modi twitter
உலகம்

”48 பில்லியன் டாலர் முதலீடு”: பிரதமர் மோடியுடன் அமேசான் CEO சந்திப்பு: AI,cloud infrastructure-க்கு முன்னுரிமை

இந்தியாவில் முதலீடு செய்வதில் உலகம் முழுவதும் வளர்ந்து வரும் ஆர்வத்தையும் இது சந்திப்பு முதலீடு காட்டுவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்

Rohini

48 பில்லியன் டாலர் முதலீடு: பிரதமர் மோடி , அமேசான் நிறுவனர் சந்திப்பு

இந்தியாவில் அமேசான் நிறுவனம் சுமார் 48 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகளை மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் மோடியை சந்தித்த பிறகு அமேசான் நிறுவனத்தின் CEO அறிவித்துள்ளார். 

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது

திரு. ஆண்டி ஜாஸ்ஸி அவர்களுடனான சந்திப்பு மிகச் சிறப்பாக அமைந்தது. இந்தியாவில் அமேசான் நிறுவனம் மேற்கொண்டுள்ள 48 பில்லியன் டாலர் அளவிலான சாதனை முதலீட்டை நான் வரவேற்கிறேன்.

இது நமது இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். அதே வேளையில், இந்தியாவில் முதலீடு செய்வதில் உலகம் முழுவதும் வளர்ந்து வரும் ஆர்வத்தையும் இது காட்டுகிறது என்று அமேசான்ன் நிறுவனர் உடனான சந்திப்பை பகிர்ந்துள்ளார்

இந்த சந்திப்பு குறித்து அமேசான் நிறுவனர் தனது பதிவில் தெரிவித்துள்ளதாவது

இந்தியாவில் அமேசானின் எதிர்காலம் குறித்து பிரதமர் @நரேந்திரமோடியுடன் நடத்திய சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

நாங்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்தியாவில் வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், டெவலப்பர்கள், ஸ்டார்ட்அப்கள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு சேவை செய்து வருகிறோம், இது ஒரு தொடக்கம்தான்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் உள்கட்டமைப்பில் முதலீடு

வரும் ஐந்து ஆண்டுகளில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் உள்கட்டமைப்பில் $21 பில்லியனுக்கும் அதிகமான முதலீடு உட்பட, $48 பில்லியன் முதலீடு செய்ய உள்ளதாகப் பகிர்ந்து கொண்டோம்.

செயற்கை நுண்ணறிவை அரசுப்பள்ளிகளில் சேர்ப்பதே இலக்கு

2030-க்குள், 3.8 மில்லியன் வேலைவாய்ப்புகளை ஆதரிக்கவும், $80 பில்லியன் மதிப்பிலான இ-காமர்ஸ் ஏற்றுமதியை சாத்தியமாக்கவும், மேலும் 15 மில்லியன் சிறு வணிகங்களுக்கும் 4 மில்லியன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவின் பலன்களைக் கொண்டு சேர்க்கவும் திட்டமிட்டுள்ளோம்.

எதிர்காலம் குறித்து உற்சாகமாக உள்ளேன். நாம் உருவாக்கக்கூடியவற்றுக்கு இது இன்னும் ஆரம்பக் கட்டம்தான்.

என்று இவ்வாறு பதிவிட்டுள்ளார்

=====================