A single word changed the mind of scientist Alfred Nobel, and the world-renowned Nobel Prize source:thamizhalai,ai generated
உலகம்

”நோபல் பரிசின் கதை” : டைனமைட்டை கண்டுபிடித்த ஆல்ஃப்ரடு நோபல் : நாசக்கார விஞ்ஞானி to நோபல் பரிசு வரை..!

ஒரு வார்த்தையால், விஞ்ஞானி ஆல்ஃப்ரடு நோபலின் மனம் மாற, அதன் பின்னணியில் உருவானது தான் உலகப் புகழ்பெற்ற நோபல் பரிசு

Kannan

ஆல்ஃப்ரடு நோபல் - நோபல் பரிசு

உலக அளவில மிக உயர்ந்த, மதிப்பு மிக்க நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பரிசு உருவாக, ஒரு விஞ்ஞானி தான் காரணமாக இருந்தார். டைனமைட் வெடிப்பொருளை கண்டுபிடித்ததால், நாசக்கார விஞ்ஞானி என்று அழைக்கப்பட்ட ஆல்ஃப்ரடு நோபல், வரலாற்றில் தனது பெயர் இப்படி இடம் பெயருவதை விரும்பாமல், தனது சொத்துக்களை நல்ல நிகழ்வுகளுக்காக செலவிட்டது மட்டுமல்லாம, “நோபல் பரிசு” என்ற ஒன்றை நிறுவி, உலக வரலாற்றில நிலைத்து நிக்கிறாரு. 1901ம் தொடங்கி இதுவரை பல்வேறு துறைகளில் சிறந்த 633 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு இருக்கு.

அமைதிக்கான நோபல் பரிசு

உலக அளவில கண்டிபிடிப்புகள், அமைதிக்காக போராடும் தலைவர்கள் விரும்புவதெல்லாம் தங்களுக்கு நோபல் பரிசு கிடைக்காதா என்பது தான். பல்வேறு நாடுகளுக்கு இடையே சண்டையை நிறுத்தி சமாதானம் செஞ்சதா சொல்லிக்கிற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பு கூட, தனக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை அப்படிங்கற ஆதங்கத்தை அப்பட்டமா வெளிப்படுத்தினார்.

அப்படி என்னதான் இருக்கு நோபல் பரிசுலன்னு பார்த்தா, பின்னானி ஒரு விஞ்ஞானியோட அர்ப்பணிப்பான வாழ்க்கை அடங்கி இருக்கு. அவர் தான் ஆல்ஃப்ரடு நோபல்.

ஒற்றை வார்த்தை - நோபல் பரிசு உருவாக காரணம்

நோபல் பரிசுக்காக தனது சொத்துகளையே விற்ற விஞ்ஞானி இவர், ஒற்றை வார்த்தை இவரது வாழ்க்கையை திருப்பி போட்டுச்சு. அவரது கடைசி ஆசையே நோபல் பரிசு உருவாக காரணமாக இருந்திச்சு.

வெடிப்பொருட்களை கண்டுபிடித்த ஆல்ஃப்ரடு நோபல்

ஆல்ஃப்ரடு நோபல் (Alfred Nobel) சாதாரண விஞ்ஞானி கிடையாது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இவர், 1830ல பிறந்தாரு. ஒரு கால கட்டத்தில தலைசிறந்த விஞ்ஞானியா திகழ்ந்த இவரு, ராணுவத்திலும், சுரங்கங்களிலும் பயன்படுத்தப்படும் பல்வேறு வெடிப்பொருட்களை கண்டுபிடிச்சாரு.

இன்னும் சொல்லப் போனால் 150க்கும் மேற்பட்ட வெடிப்பொருட்களை கண்டு பிடிச்சு அசத்தியவர் தான் ஆல்ஃப்ரடு நோபல்.

நாசக்கார விஞ்ஞானி

நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச 'டைனமைட்' வெடிப்பொருளின் பிதாமகரும் இவர் தான். இதனால, இவரை நாசக்கார விஞ்ஞானி அப்படின்னு ஐரோப்பிய மக்கள் சபிச்சாங்க.

தொழில் புரட்சி தொடங்கிய காலத்தில ஆல்ஃப்ரடு நோபல் கண்டிபிடிச்ச டைனமைட், சுரங்கங்கள் தோண்டவும், மலைகளை உடைத்து வாகனப் போக்குவரத்துக்காக பாதைகளை அமைக்கவும் உதவினாலும், இன்னொரு பக்கம் சண்டை அப்படின்னு வந்துட்டா, பேரழிவை ஏற்படுத்திச்சு.

நாசக்கார விஞ்ஞானியை மாற்றிய ஒரு வார்த்தை

இந்தநிலையில் தான் ஆல்ஃப்ரடு நோபல் மனசை மாத்துற சம்பவம் ஒன்னு நிகழ்ந்துச்சு. அவரோட சகோதரர் லுட்விக் நோபல் மரணம் அடைஞ்சப்ப, செய்தித்தாள்களில் தவறுதலா, ஆல்ல்ப்ரடு நோபல் காலமாகி விட்டதாக செய்தி வந்துச்சு.

ஒரு பிரெஞ்சு இதழ், 'மரண வியாபாரி ஆல்ஃப்ரடு நோபல் மரணம்' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுச்சு. இதை பார்த்து மிகவும் மனம் நொந்து போனாரு ஆல்ஃப்ரடு நோபல்.

வரலாற்றை மாற்றி அமைத்த ஆல்ஃப்ரடு நோபல்

உலகிற்கு நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் கண்டுபிடித்த வெடிப்பொருட்களே, தனது பெயருக்கு களங்கமா அமைஞ்சத அவர் மனம் ஏற்கவில்லை. எனவே, வரலாற்றில் மிக மோசமான விஞ்ஞானியா, மரண வியாபாரியா தனது பெயரை பதிவாகிறதை விரும்பாத ஆல்ஃப்ரடு நோபல், வெடிப்பொருட்கள் கண்டுபிடிப்பால் தனக்கு கிடைச்ச அபரிதமான சொத்துக்களை பொதுச்சேவைக்கு செலவிட்டாரு.

பல்துறை வித்தகர் ஆல்ஃப்ரடு நோபல்

வெறும் விஞ்ஞானியாக மட்டுமல்லாமல தொழில் முனைவர், பொறியாளர், வேதியியல் நிபுணர், வியாபாரம், கவிஞர், நாடகத்துக்கு கதை எழுதுபவர் என பல்துறை வித்தகரா ஆல்ஃப்ரடு நோபல் திகழ்ந்தார்.

இருந்தாலும், உலக நன்மைக்காக எதையாவது செய்ய வேண்டும் வரலாற்றில தனது பெயர் புகழோடு இடம்பெறணும் அப்படின்னு ஆல்ஃப்ரடு நோபல் ஆசைப்பட்டாரு.

நோபல் பரிசை நிறுவிய ஆல்ஃப்ரடு நோபல்

அறிவியல், மருத்துவம், நாடகம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் கெளரவிக்கப்பட வேண்டும், அதற்காக உலக அளவில சிறந்த ஒரு பரிசை தான் உருவாக்க வேண்டும் அப்படின்னு நினைச்சாரு.

ஆறு துறைகளில் நோபல் பரிசு

தான் இறப்பதற்கு முன்பு 1895ம் ஆண்டு உயில் ஒன்றை எழுதிய ஆல்ஃப்ரடு நோபல், தன்னோட சொத்துகளின் பெரும் பகுதியை விற்று, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் மிகப்பெரிய பங்களிப்பை அளிப்பவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என எழுதினாரு.

1901 முதல் நோபல் பரிசுகள்

அடுத்த ஆண்டே ஆல்ஃப்ரடு நோபல் இந்த உலகை விட்டு பிரிய, அவரது ஆசைய நிறைவேத்துற விதமாக நோபல் பரிசு உருவாக்கப்பட்டது. 1901-ம் ஆண்டு தொடங்கி இப்போது வரை நோபல் பரிசுகள் தொடர்ச்சியா வழங்கப்பட்டு வருகின்றன.

உலக அமைதிக்கான நோபல் பரிசு

6 துறைகளில சிறந்த சேவையாற்றியவங்களுக்கு நோபல் பரிசு வழங்கினாலும், அமைதிக்கான நோபல் பரிசு எப்போதும் டாப் தான். மக்களின் உரிமைகளுக்காக போராடியவர்கள், அமைதியை நிலைநாட்டியவர்கள் பரிசை பெற்று, அழியா புகழை பெற்று வர்றாங்க.

பல நாடுகளில் அரசுகளால் சிறை வைக்கப்பட்டும், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டும் இருந்தவர்களையும் அமைதிக்கான நோபல் பரிசை நாடிச் சென்று இருக்கு.

1991ல் வீட்டுக் காவலில் இருந்த மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூகிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2010-ஆம் ஆண்டு சீன மனித உரிமைப் போராளி லியூ சியாபோ-வுக்கு நோபல் பரிசு கிடைச்சது. அப்பொழுது அவர் சிறையில் இருந்ததால் நிகழ்ச்சி அரங்கில் அவருக்கான நாற்காலி காலியாக வைக்கப்பட்டு உலகின் கவனத்தை ஈர்த்தது.

2023-இல் ஈரான் மனித உரிமை ஆர்வலர் நர்கீஸ் முகமதிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அவர் அப்பொழுது ஈரானின் எவின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

17 வயதில் நோபல் பரிசு

பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் மலாலா யூசுப்சாய் என்பவர் தான் மிக இளம் வயதில் நோபல் பரிசை வென்ற பெருமைக்கு உரியவர். 2014ல் தனது 17-ஆம் வயதில் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு கொடுக்கப்பட்டுச்சு.

97 வயதில் நோபல் பரிசு

அமெரிக்காவின் ஜான் குட்எனஃப் (John Goodenough) 2019ல் தனது 97ம் வயதில் லித்தியம்-அயன் பேட்டரி கண்டுபிடிப்புக்காக வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். அவர் தான் நோபல் பரிசு பெற்ற மூத்த விஞ்ஞானி ஆவார்.

1974ம் ஆண்டு விதிகள் மாற்றப்பட்ட பிறகு, மரணத்திற்குப் பின் நோபல் பரிசு வழங்கப்படுவது கிடையாது. அதேசமயம், பரிசு அறிவிக்கப்பட்டு, விழா நடப்பதற்குள் ஒருவர் இறந்தால், விருது அவரது குடும்பத்தாரிடம் வழங்கப்படும். ரத்து செய்யப்படாது.

இதுவரை 633 பேருக்கு நோபல் பரிசு

1901 முதல் இதுவரை வழங்கப்பட்ட 633 நோபல் பரிசுகளில் 68 பெண்களுக்கு மட்டுமே உலகின் உயரிய விருது கிடைத்து இருக்கிறது. வழங்கப்பட்டுள்ளது. இது வெறும் 10 சதவீதம் தான்.

68 பெண்கள் நோபல் பரிசு பெற்றனர்

இயற்பியலில் 5 பெண்கள், பொருளாதாரத்தில் 3 பெண்கள், வேதியியலில் 8 பெண்கள், மருத்துவத்தில் 14 பெண்கள் இதுவரை நோபல் பரிசை பெற்றிருக்கின்றனர்.

இவர்களில் குறிப்பிடத் தக்கவர் மேரி கியூரி. ரேடியம் தனிமத்தை கண்டறிந்தவர் மேரி கியூரிக்கு, 1903-இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி இவர்தான்.

வெடிப்பொருட்கள் ஆக்கமும், அழிப்பும்

இந்த உலகில் ஒவ்வொரு தனித்துவம் மிக்கவை. மனித சமுதாயத்திற்கு பயனளிப்பவை. ஆல்ஃப்ரடு நோபல் கண்டுபிடிச்ச டைனமைட் போன்ற வெடிப்பொருட்கள், மனிதர்களுக்கு வேண்டுமானால் தீங்கு இழைக்கலாம்,

ஆனால் தொழில்நுட்ப புரட்சி, கனிம வளங்களை கண்டுபிடிக்கும் பணிகளின் இவற்றை சேவை மகத்தானது. ஒரு காலத்துல மரண வியாபாரி என்று மக்களால் ஏசப்பட்ட ஆல்ஃப்ரடு நோபல், சமூக சேவை, உயரிய நோபல் பரிசினை நிறுவியதன் மூலமே, உலகமே கொண்டாடும் விஞ்ஞானியா நினைவு கூரப்படுகிறாரு.

வரலாற்று நாயகர் ஆல்ஃப்ரடு நோபல்

ஆல்ஃப்ரடு நோபலின் பெயர் உலக வரலாற்றில் எப்போதும் நிலைத்து நிற்கும். அவர் நிறுவிய நோபல் பரிசு, பல்துறை வித்தகர்களின் கைகளுக்கு சென்று, தன்னுடைய புகழை மேலும் உயர்த்திக் கொண்டே வருது.

=================