After four years, the price of crude oil has touched $110, shocking the world google
உலகம்

2022க்கு பிறகு முதன்முறை... : ”110 டாலரை தாண்டிய கச்சா எண்ணெய்” : இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்!

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, கச்சா எண்ணெய் விலை 110 டாலரை தொட்டு, உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

Kannan

உக்கிரமடைந்துள்ள போர்

Oil prices surged on Monday well above $110 a barrel : மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் 10 நாளாக தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், அந்நாட்டு எண்ணெய் கிடங்குகளும் தகர்க்கப்பட்டு வருகின்றன.

பதிலடி கொடுத்த ஈரான்

ஈரானில் மட்டும் பலி எண்ணிக்கை 1,500 தாண்டி இருக்கும் எனத் தெரிகிறது. இதுவரை 1,300 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான் பதிலடி கொடுக்கும் வகையில், வளைகுடாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது. பின்னர் அதற்காக மன்னிப்பு கோரி தாக்குதல் கைவிட்டு இருக்கிறது.

வெடித்து சிதறிய எண்ணெய் கிடங்குகள்

தலைநகர் டெஹ்ரானில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஷார்-இ-ரே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்ம மீது இஸ்ரேல் போர் விமானங்கள் வான்வழி தாக்குதலை நடத்தின. இந்த தாக்குதலால் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் வெடித்து சிதறி பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

ஈரானிலும் எரிபொருள் தட்டுப்பாடு

தாக்குதல் காரணமாக சுமார் 1 கோடியே 95 லட்சம் லிட்டர் எரிபொருள் தீயில் எரிந்து நாசமானது. இதில் தொழிலாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலால் ஈரானில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் கரும் புகையால் டெஹ்ரான் சுற்றுச்சூழல் துறை ‘பிளாக் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது

இஸ்ரேலிலும் கிடங்கு மீது தாக்குதல்

இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் ஐபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை

போர்ச்சூழல், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடி வைத்து இருப்பது போன்ற காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

110 டாலரை தாண்டிய விலையேற்றம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென 20-26 சதவீதம் உயர்ந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 116.30 டாலராகவும், டபிள்யூடிஐ 115.41 டாலராகவும் உயர்ந்துள்ளது. இது 2022 ஜூலைக்குப் பிறகு இல்லாத விலை உயர்வாகும்.

எண்ணெய் உற்பத்தி குறைப்பு

ஈரான் படைகள் ஹர்முஸ் ஜலசந்தி மூடி விட்டதால், உலக அளவில் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து தடைபட்டுள்ளது. கச்சா எண்ணெய் அனுப்புவதில் எழுந்துள்ள சிக்கலை கருத்தில் கொண்டு எண்ணெய் உற்பத்தியை வளைகுடா நாடுகள் குறைத்து இருக்கின்றன.

இந்தியாவுக்கு பாதிப்பா?

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 90 சதவீதத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. சர்வதேச அளவில் ஏற்றம் கண்டு வரும் எண்ணெய் விலை, இந்தியாவையும் பாதிக்கும். ரஷ்யா, வெனிசுலாவிடம் இருந்து வாங்கப்படும் எண்ணெய்க்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டி இருக்கும்.

இதன் காரணமாக, இந்தியாவில் விரைவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏற்படும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. 2025ம் நிதியாண்டில் மட்டும் இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக 167 பில்லியன் டாலர் செலவு செய்துள்ளது.

====