அமெரிக்காவில் விண்வெளி ஆய்வுகள்
Artemis II will pave the way for future Moon landings, as well as the next giant leap — astronauts on Mars : விண்வெளி ஆய்வு, நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 1969ம் ஆண்டு முதன் முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. இது விண்வெளி ஆய்வில் புதிய மைல்கல்லாக அமைந்தது.
நிலவுக்கு சென்ற மனிதர்கள்
இந்நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தை சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு நாசா துவங்கியது.
2025-க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டாலும், பல்வேறு காரணங்களால் அது தாமதமானது.
நான்கு வீரர்கள் பயணம்
இந்தநிலையில், தடைகளை எல்லாம் தாண்டி ‘ஆர்டெமிஸ் -2’ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி அமெரிக்கா வரலாறு படைத்து இருக்கிறது.
நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ மிஷன் மூலம் நான்கு விண்வெளி வீரர்களுடன் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.05 மணிக்கு வெற்றிகரமாக பயணத்தை தொடங்கினார்.
நிலவைச் சுற்றி 10 நாட்கள்
‘ஓரியன்’ விண்கலம். இவர்கள் இந்த பயணத்தில் நிலவை சுற்றி வரவுளள்னர். விண்வெளி பயணத்தில் மூன்று அமெரிக்க மற்றும் கனடா நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவரும் பயணித்துள்ளனர். அவர்களது பயணம் 10 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தில் ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச் (விண்வெளி வீராங்கனை) மற்றும் கனடாவின் ஜெர்மி ஹன்சன் ஆகிய விண்வெளி வீரர்கள் இருக்கின்றனர்.
கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
ராக்கெட் செலுத்தப்பட்ட சில நிமிடங்களுக்கு பின்னர், மைய பகுதியில் உள்ள இயந்திரம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து தனியாக சென்றது.
நிலவை நோக்கி வெற்றிப் பயணம்
இதனை அடுத்து, ராக்கெட்டுடன் இணைக்கப்பட்டு இருந்த ‘ஓரியன்’ விண்கலம் நிலவை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கிறது.
இந்த விண்கலம் முதல் நாள் முழுவதும் பூமியின் சுற்றுப்பாதையை சுற்றிவந்த பின்னர் நிலவை நோக்கி செல்லும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
பூமிக்கு திரும்பும் ஓரியன்
10 நாட்களுக்கு பிறகு ‘ஓரியன்’ விண்கலம் நிலவை சுற்றி வந்த பின்னர் பூமிக்கு திரும்பும்.
===