All praise goes to Donald Trump and PM Narendra Modi US ambassador happy about trade deal Source : Truth Social
உலகம்

இந்தியா மீதான வரி குறைப்பு : பாராட்டி தள்ளும் அமெரிக்க தூதர்

இந்தியாவிற்கான வரி 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டதையடுத்து . இதற்கான எல்லாப் பெருமையும் அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியை சேரும் என்று அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் பாராட்டு.

Rohini

அமெரிக்கா 50% வரி விதிப்பு

US India Trade Deal : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதால், 25 சதவீத அபராத வரி உட்பட 50 சதவீத அமெரிக்க வரிகளை இந்தியா எதிர்கொண்டது.

இந்தியா நிலைப்பாட்டில் மாற்றம்

தற்போது பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அமெரிக்காவும், இந்தியாவும் ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.

18 சதவீதமாக வரி குறைப்பு

அதிபர் டிரம்ப் நிர்வாகம் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் செய்த காரணத்தால் இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை 18 சதவீதமாக குறைத்துள்ளதாக அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் உறுதிப்படுத்தி உள்ளார்.

செர்ஜியோ கோர் வரவேற்பு

இறக்குமதி வரியை 18 சதவீதமாக குறைத்து இரு நாடுகளுக்கிடையே உறவை வலுப்படுத்தியதற்கான அனைத்து புகழும் பெருமையும் அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடியே சாறும் என்று புகழாரம் பாராட்டியுள்ளார் .

டிரம்ப், மோடிக்கு பாராட்டு

இருநாட்டு தலைவர்களும் ஒரு சிறந்த தனிப்பட்ட உறவை கொண்டுள்ளனர். இது ஒப்பந்தத்தை உறுதி செய்ய வழி வகுத்தது. இது ஒரு புதிய சகாப்தம்.

ரஷ்யா எண்ணைய்க்கு செக்

மேலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளும் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி நிலைமையை அமைதிப்படுத்த வேண்டும்.

அதிபர் டிரம்பைப் போலவே பிரதமர் மோடியும் அமைதியைக் கொண்டுவருவதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர் என்பதை நான் அறிவேன். இவ்வாறு அவர் கூறினார்.

பலரும் பாராட்டு

அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் மட்டும் அல்லாது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வர்த்தகததுறை அமைச்சர் பியுஷ் கோயல், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலரும் பாராட்டி கருத்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

===================