American Vice president JD Vance Says iran war makes Results Different Google
உலகம்

தேர்தலின் தோல்விக்கு காரணம் ஈரான் போர் : மறைமுகமாக டிரம்ப்பை சாடுகிறாரா ஜே.டி. வான்ஸ்?

நடந்து முடிந்த இடைக்கால தேர்தல் தோல்விக்கு பிறகு அமெரிக்கா துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இவ்வாறு கருத்து ...

NARENDRAN K

அமெரிக்க இடைத்தேர்தலில் பின்னடைவு :

அமெரிக்க இடைத்தேர்தலில் ட்ரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்திருக்கு.

இந்தத் தேர்தல் முடிவுகள் ட்ரம்ப் அரசுக்கு அரசியல் ரீதியாகப் பின்னடைவாகப் பார்க்கப்படுது.

இந்தத் தோல்விக்கு ஈரான் போர்தான் முக்கிய காரணம் என அமெரிக்க துணை அதிபர் JD வான்ஸ் கூறியிருக்கிறார்.

ஈரான் போரால் மக்கள் அதிருப்தியா?

அதாவது, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் நடவடிக்கைகளைத் தொடங்கியதில் இருந்தே அந்நாட்டு மக்களிடையே அதிருப்தி அதிகரிச்சிருக்கு.

குறிப்பாக, போரால் பெட்ரோல் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு எனப் பல பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கு.

இதனால் ட்ரம்ப் அரசின் முடிவுகள் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், அது தேர்தல் முடிவுகளில் எதிரொலித்திருப்பதாகவும் அரசியல் ரீதியாகப் பேசப்படுகிறது.

டிரம்ப்பை மறைமுகமாகச் சாடிய JD வான்ஸ் :

இந்தச் சூழலில்தான் JD வான்ஸ் தேர்தல் தோல்வி குறித்து தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

அதாவது, குடியரசுக் கட்சியின் தோல்விக்கு ஈரான் போர்தான் முக்கிய காரணம் என்ற கருத்தை அவர் முன்வைத்திருக்கிறார்.

மேலும், ஈரான் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், அமெரிக்காவின் பொருளாதார பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

டிரம்ப் – வான்ஸ் இடையே கருத்து வேறுபாடா :

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான தனது போர் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி வருகிறார்.

ஆனால் அவருடைய துணை அதிபரான JD வான்ஸ், அதே போர் தேர்தல் தோல்விக்குக் காரணமாக அமைந்ததாகக் கூறியிருக்கிறார்.

இதனால் இருவருக்கும் இடையே ஈரான் போர் தொடர்பாக கருத்து வேறுபாடு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.