At UN General Assembly, Zelenskyy Accuses Russia of Using Foreign Nationals in War Google
உலகம்

UN மேடையில் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு: “47 நாடுகளின் மக்களை போரில் பயன்படுத்துகிறது ரஷ்யா

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா வெளிநாட்டு குடிமக்களை அதிகளவில் ஈடுபடுத்தி வருவதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்

NARENDRAN K

UN Genral -ல் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி பேச்சு :

ரஷ்யா - உக்ரைன் போர் நான்காவது ஆண்டை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ரஷ்யா தனது போர் நடவடிக்கைகளுக்காக 47 நாடுகளைச் சேர்ந்த மக்களை பயன்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ராணுவத்தில் வெளிநாட்டு குடிமக்கள் ஒப்பந்த அடிப்படையிலும், வேலைவாய்ப்பு வாக்குறுதிகள் மூலமும் சேர்க்கப்படுவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

குறிப்பாக ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் போர்க்களத்திற்கு அனுப்பப்படுவதாகவும் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

நியூயோர்க்கில் நடந்த நிகழ்ச்சி :

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத் தொடரில் கலந்து கொண்ட உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து பல்வேறு நாடுகளின் தலைவர்களிடம் ஆதரவு கோரினார்.

அப்போது பேசிய அவர், ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு குடிமக்களை அதிகளவில் பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.

இந்தியர்களும் ரஷ்ய படையில்?

இந்தியர்களும் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றியுள்ளதாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பல தகவல்கள் வெளியாகின.

வேலைவாய்ப்பு, கல்வி வாய்ப்பு அல்லது பாதுகாப்பு பணிகள் என்ற பெயரில் சிலர் ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் போர்ப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதாக இந்திய அதிகாரிகள் விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர்.

இந்திய அரசு இதுபோன்ற ஆட்கள் சேர்க்கை மோசடிகள் குறித்து நடவடிக்கையும் எடுத்துள்ளது.

உயிரிழந்த இந்தியர்கள் :

ரஷ்ய ராணுவத்தில் இணைக்கப்பட்ட சில இந்தியர்கள் உக்ரைன் போரில் உயிரிழந்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் முன்னதாக தெரிவித்திருந்தது.

மேலும், சிலர் காயமடைந்ததோடு, பலர் மீட்கப்பட்டு இந்தியா திரும்பியதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் ரஷ்ய தாக்குதலில் உக்ரைனில் வசித்து வந்த இந்திய குடிமகன் ஒருவரும் உயிரிழந்ததாக ஜெலன்ஸ்கி குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

ரஷ்யா - உக்ரைன் போரில் இந்தியா எந்தத் தரப்பிலும் ராணுவ ரீதியாக பங்கேற்கவில்லை.

போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை மற்றும் தூதரக தீர்வுகளே அவசியம் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இரு நாடுகளுடனும் தொடர்பில் இருந்து அமைதிக்கான முயற்சிகளை இந்தியா ஆதரித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கவனம் பெற்ற ஜெலன்ஸ்கி கருத்து :

ரஷ்யா தனது மனிதவள பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாட்டு குடிமக்களை பயன்படுத்தி வருவதாக உக்ரைன் நீண்ட காலமாக கூறி வருகிறது.

தற்போது 47 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்ற ஜெலன்ஸ்கியின் குற்றச்சாட்டு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

எனினும், இந்த எண்ணிக்கையை ரஷ்யா அதிகாரப்பூர்வமாக ஏற்கவில்லை.

====================