REUTERS
உலகம்

போர் தொடங்கி விட்டது, இரக்கம் காட்ட மாட்டேன் - கமேனி எச்சரிக்கை

போர் தொடங்கி விட்டது, யாருக்கும் இரக்கம் காட்ட முடியாது என்று, இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் ஈரான் சுப்ரீம் தலைவர் அயதுல்லா கமேனி எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.

Kannan

அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் தொடர்ந்து ஈடுபடுவதாகவும், பயங்கரவாத அமைப்புகளை ஆதரிப்பதாகவும் கூறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால், பெரும் பாதிப்பை சந்தித்து வரும் ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது.

இஸ்ரேலுக்கு ஐரோப்பிய நாடுகள் மறைமுக ஆதரவு தந்து வருவதால், மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

ஜி 7 உச்சி மாநாட்டிலும் இஸ்ரேலை ஆதரித்த வளர்ச்சி அடைந்த நாடுகள், ஈரானை எச்சரித்தன.

இதனால், தாக்குதல் மேலும் உக்கிரமடையும் நிலை உருவாகி உள்ளது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானை விட்டு, பொதுமக்கள் உடனே வெளியேற வேண்டும் என்று, அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்தது பதற்றத்தை கூட்டி உள்ளது.

இஸ்ரேல், அமெரிக்காவின் மிரட்டலுக்கு பதில் சொல்லும் வகையில், ஈரான் சுப்ரீம் தலைவர் அயதுல்லா கமேனி எச்சரிக்கை ஒன்றை விடுத்து இருக்கிறார்.

"போர் தொடங்கி விட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், சியோனிஸ்ட்டுகளுக்கு இரக்கம் காட்ட முடியாது என்று திட்டவட்டமாக கூறி இருக்கிறார்.

சமரசத்துக்கு வாய்ப்பில்லை வாய்ப்பே இல்லை என்று மிரட்டியுள்ள கமேனி, கோட்டை வாயிலில் படைகள் வாள் ஏந்தி நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு பீதியை கிளப்பி உள்ளார்.

இதனிடையே, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது Fattah-1 ஹைப்பர்சோனிக்

ஏவுகணையை செலுத்திய ஈரான் தனது ராணுவ பலத்தை காட்டியுள்ளது.

----