Balendra Shah's 100-Point Action Plan in Nepal! Ban on Politics in Educational Institutions - Shocking Changes! source:google
உலகம்

நேபாளத்தில் பாலேந்திர ஷாவின் 100 அம்ச அதிரடி திட்டம்! : கல்வி நிலையங்களில் அரசியலுக்குத் தடை : அட்டகாசமான மாற்றங்கள்!

பாலேந்திர ஷாவின் தேர்தல் வாக்குறுதிகளின்படி, லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

S Kavitha

பிரதமராக பொறுப்பேற்ற பாலேந்திர ஷா

நேபாளத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ராஷ்ட்ரிய சுதந்திர கட்சிஅமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 35 வயதான பாலேந்திர ஷா அந்நாட்டின் இளம் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

"100 அம்ச வேலைத்திட்டம்"

பதவியேற்ற ஒரு மாதத்திற்குள்ளேயே, அவர் வெளியிட்டுள்ள "100 அம்ச வேலைத்திட்டம் நேபாள அரசியலில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்வி நிலையங்களில் அரசியல் ஒழிப்பு

நேபாளக் கல்வி முறையில் பிரதமர் பாலே கொண்டுவந்துள்ள மிக முக்கியமான மாற்றங்கள் முழு விவரம்...!

மாணவர் அமைப்புகளுக்குத் தடை

பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய மாணவர் அமைப்புகள் அனைத்தும் கலைக்கப்பட்டுள்ளன.

அரசியல் தலையீடு கிடையாது

"மாணவர்கள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். அரசியலில் ஈடுபட விரும்புவோர் படிப்பை முடித்துவிட்டு வரலாம்" என்று பாலே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

'மாணவர் கவுன்சில்'

மேலும் 90 நாட்களுக்குள் 'மாணவர் கவுன்சில்' என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

நிர்வாகச் சீர்திருத்தங்கள்: தலைவர் படங்கள் கிடையாது

அரசு அலுவலகங்களில் இனி அரசியல் தலைவர்களின் புகைப்படங்களுக்கு இடமில்லை. அதற்குப் பதிலாக நேபாள நாட்டின் தேசியக் கொடி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட சின்னமாக வைக்கப்படும்.

விஐபி கலாச்சாரம் ஒழிப்பு

சாலைகளில் தலைவர்களின் வருகைக்காகப் போக்குவரத்து நிறுத்தப்படாது. மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்தவொரு அரசியல் கட்சியிலும் உறுப்பினராக இருக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுகாதார விஷயத்தில் செய்யப்பட்ட முக்கிய மாற்றம்

10% இலவசப் படுக்கைகள். அதாவது அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் 10% முதல் 20% வரையிலான படுக்கைகள் ஏழைகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு மற்றும் தண்டனைகள்

பாலேந்திர ஷாவின் தேர்தல் வாக்குறுதிகளின்படி, லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பெண்களுக்கெதிரான கடுமையான தண்டனைகளுக்கு அரசு முன்னுரிமை

மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில், குறிப்பாகப் பாலியல் குற்றவாளிகளுக்கு விரைவான விசாரணை மற்றும் கடுமையான தண்டனைகளை உறுதி செய்யும் சட்டத் திருத்தங்களுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

=====