Bangladesh Prime Minister Tarique Rahman’s swearing-in ceremony of New Bangladesh PM Today Source : Google
உலகம்

Bangladesh New PM : வங்கதேச பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்பு : குவியும் வாழ்த்துக்கள்!

Tarique Rahman’s swearing-in ceremony of New Bangladesh PM : பிஎன்பி கட்​சி​யின் தலை​வர் தாரிக் ரஹ்​மான் வங்​கதேச பிரதம​ராக முறைப்படி பதவி​யேற்றார்.

Baala Murugan

வெற்றி பெற்ற பிஎன்பி கட்சி

Tarique Rahman’s swearing-in ceremony of New Bangladesh PM : பிஎன்பி கட்​சி​யின் தலை​வர் தாரிக் ரஹ்​மான் (பிப்​ர​வரி 17-ம் தேதி) வங்​கதேச பிரதம​ராக பதவி​யேற்றார். வங்​கதேசத்​தில் சமீபத்​தில் நடை​பெற்ற பொதுத்​ தேர்​தலில் மறைந்த வங்​கதேச பிரதமர் கலிதா ஜியா​வின் மகன் தாரிக் ரஹ்மான் தலை​மையி​லான பிஎன்பி கூட்​டணி அதிக இடங்களைக் கைப்​பற்​றியது.

பிஎன்பி கட்சி அமோக வெற்றி

300 இடங்​களைக் கொண்ட வங்கதேச நாடாளு​மன்​றத்​தில், 200-க்​கும் மேற்​பட்ட இடங்​களை பிஎன்பி கூட்​டணி கைப்​பற்றி அறு​திப் பெரும்​பான்​மை​யுடன் வெற்றி பெற்​றது.

பதவியேற்பு விழாவிற்கு மோடிக்கு அழைப்பு

இதன் ​மூலம் சுமார் 17 ஆண்​டு​களுக்​குப் பின்​னர் வங்​கதேசத்​தில் பிஎன்பி ஆட்சி அமைய உள்​ளது. வெற்றியை தொடர்ந்து, வங்​கதேச பிரதம​ராக தாரிக் ரஹ்மான் பதவி​யேற்கவிருந்த நிலையில், பதவி​யேற்பு விழாவுக்கு வருகை தரு​மாறு பிரதமர் மோடிக்​கு, வங்​கதேசம் அழைப்பு விடுத்​தது.

எனினும், மும்​பை​யில் பிரான்ஸ் அதிபர் இம்​மானுவேல் மேக்​ரானை சந்​தித்து பேச வேண்டிய இருந்ததால், பிரதமர் மோடிக்கு பதிலாக சபாநாயகர் ஓம். பிர்லா கலந்து கொண்டார்.

நல்லுறவை வலுப்படுத்தும் முயற்சி

முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா​வின் பதவி​யிழப்​புக்​குப் பிறகு இந்​தியா - வங்​கதேசம் இடையே​யான உறவில் பின்​னடைவு ஏற்பட்டுள்ள நிலை​யில், இந்த அழைப்பு மிக​வும் முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாகப் பார்க்​கப்​படு​கிறது.

இந்த பதவி​யேற்பு விழாவுக்கு வரு​மாறு பாகிஸ்​தான் உள்​ளிட்ட சார்க் நாடு​களின் தலை​வர்​கள், சீனா, மலேசி​யா போன்ற பிற நட்பு நாடு​களின் தலை​வர்​கள் ஆகியோ​ருக்​கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

பிரதமராக பதவியேற்றார் தாரிக் ரஹ்மான்

இந்நிலையில், குறிப்பிட்டப்படி புதிய பிரதமராக வங்கதேச தேசியவாத கட்சியின் (பி.என்.பி) தலைவர் தாரிக் ரஹ்மான் பதவியேற்றார். அவருடன் புதிய அமைச்சரவையின் உறுப்பினர்களும் பதவியேற்றனர்.

வங்கதேச இடைக்கால அரசின் முதன்மை ஆலோசகர் முகமது யூனுஸ் மற்றும் வங்கதேச அதிபர் முகமது சாஹாபுதின் முன்னணியில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\

வரலாற்றில் முதல் முறையாக அமைச்சரவையின் பதவியேற்பு விழா திறந்த வெளியில் நடந்தது.

16 மாதங்கள் கழித்து ஜனநாயக அரசு

நடைபெற்று முடிந்த தேர்தலில், பி.என்.பி கூட்டணி 212 இடங்களில் வென்றது. ஜமாத்-இ-இஸ்லாமி கூட்டணி 77 இடங்களில் வென்றது. வங்கதேசத்தில் இடைக்கால அரசாங்கம் 16 மாதங்கள் கழித்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் அதிகாரத்தை ஒப்படைப்பது குறிப்பிடத்தக்கது.

முகமது யூனுஸ் திங்கட்கிழமை இரவு அன்று வழங்கிய பிரிவு உபசார பேச்சில் ராஜினாமா செய்வதாக அறிவித்தார் என்பது குறிப்பட்டத்தக்கது. புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.