Bill Gates warned explosive growth of AI and robots will cause major upheaval in global job market source:thamizhalai,ai generated
உலகம்

"Hire the robot, fire the human" : மனிதர்களின் உடல் உழைப்பு வேலைகளை காலி செய்யும் ரோபோக்கள் : பில் கேட்ஸ் எச்சரிக்கை!

AI மற்றும் ரோபோக்களின் அசுர வளர்ச்சியால் 20 ஆண்டுகளில் உலகளவில் வேலைவாய்ப்புச் சந்தை பெரும் கொந்தளிப்பைச் சந்திக்கும் என்று பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார்.

Kannan

உலக அளவில் ஏஐ ஆதிக்கம்

உலக அளவில் பல்வேறு துறைகளில் ஏஐ ஆதிக்கம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அதற்கு போட்டியாக ரோபோக்களும் களமாட தொடங்கி விட்டன.

எச்சரிக்கை விடுக்கும் பில் கேட்ஸ்

"ரோபோவை வேலைக்கு எடு, மனிதனை வேலையை விட்டு நீக்கு" (Hire the robot, fire the human) என்ற தாரக மந்திரம் கார்ப்பரேட் நிறுவனங்களின் எதிர்கால உத்தியாக மாறும் அப்படின்னு பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார்.

தொழில்நுட்ப நிறுவனங்கள் AI மற்றும் மேம்பட்ட ரோபோக்களை உருவாக்கும் வேகம், மனிதர்களின் வேலைவாய்ப்புச் சந்தையை முற்றிலும் முடக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதாக அவர் கருதுகிறார்.

உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு ஆபத்து

தொலைபேசி விற்பனை, வாடிக்கையாளர் சேவை, கணக்குப்பதிவியல் போன்ற அலுவலகப் பணிகளும், கட்டுமானம் மற்றும் விவசாயம் போன்ற உடல் உழைப்பு சார்ந்த பணிகளும் ரோபோக்களால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் அபாயம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாற்றி சிந்திக்கும் நிறுவனங்கள்

நிறுவனங்கள் தங்களின் உற்பத்திச் செலவைக் குறைத்து, லாபத்தை அதிகரிக்கவே முன்னுரிமை அளிக்கின்றன. சோர்வில்லாமல், 24 மணி நேரமும், எவ்வித விடுப்பும் இன்றி துல்லியமாக உழைக்கும் ரோபோக்கள் கிடைக்கும் போது, மனிதர்களை விட இயந்திரங்களையே நிறுவனங்கள் அதிகம் தேர்வு செய்யும்.

மனிதர்கள் இடத்தில் ரோபோக்கள்

இதனால், மனித ஊழியர்கள் நீக்கப்பட்டு ரோபோக்கள் நியமிக்கப்படும் போது, நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும். இது சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்கும்.

இருண்ட காலத்தை நோக்கி மனித குலம்

ஒரு "இருண்ட எதிர்காலத்தை" (Bleak future) நோக்கி மனிதகுலத்தை தள்ளும் என்றும் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார். இப்படி நடந்தால், செல்வங்கள் அனைத்தும் ஒரு சில பெருநிறுவனங்களின் கைகளில் மட்டுமே குவியும்.

அரசுக்கு வருவாய் இழப்பு

மனிதர்கள் வேலை செய்யும் போது அரசுக்கு வருமான வரி கிடைக்கிறது. ஆனால், மனிதர்களை நீக்கிவிட்டு ரோபோக்களைப் பயன்படுத்தும் போது அரசுகளுக்கான வரி வருவாய் பெருமளவு குறையும்.

பொருளாதார கட்டமைப்பு சிதையும்

இது நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பையே சிதைக்கும். எனவே, இந்த கார்ப்பரேட் போக்கைக் கட்டுப்படுத்தவும், மனித உழைப்பைப் பாதுகாக்கவும் அரசாங்கங்கள் உடனடியாக தலையிட்டு "ரோபோ வரி" போன்ற கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும் என்று பில் கேட்ஸ் யோசனை தெரிவித்துள்ளார்.

ரோபோ வரி - அரசுக்கு யோசனை

ரோபோ வரியின் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, வேலையிழந்த மனித ஊழியர்களுக்குப் புதிய திறன்களுக்கான மறுபயிற்சி அளிக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு நிதியை அதிகரிக்க வேண்டும் என்றும் பில் கேட்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

=================