BJP Ex Leader Annamalai Criticized CM MK Stalin Resolution Passed on Gaza Israel War Attack News in Tamil 
உலகம்

காஸாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகச்சிறந்த நகைச்சுவை - அண்ணாமலை!

Annamalai on Stalin : கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காஸாவை பற்றிய கவலை எதற்கு என முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதிவை மேற்கோள்காட்டி தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Bala Murugan

அண்ணாமலை பதிலடி :

Annamalai Criticize CM MK Stalin on Gaza Attack : தமிழக பாஜக முன்னாள் தலைவர் தனது எக்ஸ் பக்கத்திலும் நேரிலும் அரசியல் கருத்துக்கள் மற்றும் சமூக கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், கரூர் பிரச்சார இறப்பிற்கு பதிலளித்த அண்ணாமலை, தொடர்ந்து பல்வேறு டுவீட்டுகளை பதிவிட்டு வந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் , காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக்கோரி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவிற்கு, அண்ணாமலை ரீடுவிட் செய்து கேள்வி எழுப்பியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு :

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், காசாவில் உலகமே பார்க்க இஸ்ரேல் நடத்தி வரும் அப்பட்டமான மனித உரிமை மீறல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது; உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டியது! எங்கோ நடக்கிறது என்று உலகின் மிகப் பெரும் ஜனநாயகமான இந்தியா இந்த விவகாரத்தில் கண்மூடி இருக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாலஸ்தீனத்தைத் தொடக்கத்திலேயே அங்கீகரித்த கொள்கையுடைய இந்தியா மீண்டுமொருமுறை வரலாற்றில் சரியான முடிவை எடுக்க வேண்டிய நேரம் இது என்று தெரிவித்துள்ளார். இதற்காக ஒன்றிய அரசை வலியுறுத்தி, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் கொண்டுவரப்படும்! மனிதம் காப்போம்! என்று பதிவிட்டு இருந்தார்.

அண்ணாமலை மேற்கோள் பதிவு

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் எக்ஸ் தள பதிவை மேற்கொள்காட்டி, பா.ஜ.க. தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை(Annamalai Tweet) கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காஸாவை பற்றிய கவலை எதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே?.

மேலும் படிக்க : தவெக விஜயை பாதுகாக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை - அண்ணாமலை!

உள்ளூர் நிலைமையே ஊசலாடும் போது உலக அரசியல் உங்களுக்கு தேவைதானா? பாலஸ்தீனத்திற்கு விடிவு காலம் பிறக்க வேண்டும் என பேசும் உங்களால் வேங்கைவயல் போன்ற கொடுமைகளில் இருந்து மக்களை விடுவிக்க முடியவில்லையே ஏன்? கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த நீங்கள் காசாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகச்சிறந்த நகைச்சுவை! என்று கூறியுள்ளார்.