உலக ஆணழகன் போட்டி
Saravanan Mani Wins Mr Universe 2025 Championship : உலக ஆணழகன் போட்டி என்பது சர்வதேச அளவில் ஆண்களுக்கான உடல் கட்டுதல் (bodybuilding) போட்டியில் வெற்றியாளருக்கு வழங்கப்படும் பட்டமாகும். இது சர்வதேச உடல் கட்டுதல் மற்றும் உடல் கோப்பு சம்மேளனம் (IFBB) அமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டியாகும்.
இந்த போட்டி 1959 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் நிலையில், போட்டியில் பங்கேற்பாளர்களின் உடல் வலிமை, கட்டுப்பாடு மற்றும் தோற்றத்தை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தடகள வீரர்கள் கலந்து கொள்ளும் நிலையில், தங்களது எடைக்கு ஏற்ப எடைப்பிரிவின் ரீதியாக இந்த போட்டி நடைபெறும்.
இந்த பிரிவுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அனைத்திலும் சிறந்தவராக திகழ்பவரே உலக ஆணழகனாக அறிவிக்கப்பட்டு பரிசு பெறுவார்.
தமிழனால் முதலிடம் பிடித்த இந்தியா
உலக உடற்கட்டமைப்பு மற்றும் உடல் திறன் கூட்டமைப்பு சார்பில், 16ம் உலக ஆணழகன் போட்டி நவ 11ல் துவங்கி நடந்து முடிந்தது.இந்தோனேஷியாவில் நடந்த இந்தப்போட்டியில், உலகின் பல நாடுகளில் இருந்தும் நுாற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர்.
இந்திய அணிக்கு தங்கம்
ஒட்டுமொத்த ஆடவர் பிரிவில், 715 புள்ளிகள் பெற்று இந்திய அணி தங்கம் வென்றது. மகளிர் பிரிவில் 245 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தது. இதில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் மணி, ஒட்டுமொத்த சாம்பியன் பிரிவில், 'மிஸ்டர் யுனிவர்ஸ்' பட்டம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். இந்த பட்டத்தை இவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்றுள்ளார்.
சரவணன் மணி ஆணழகன்
சரவணன் மணி 2022, 2024 என தொடர்ந்து தற்போது 2025 ஆம் ஆண்டும் 3 வது முறையாக வென்றுள்ளார். உடல்கட்டமைப்பில் தொடர்ந்து சாதித்து வரும் இவர் வருமான வரித்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இந்த ஹாட்ரிக் வெற்றிக்கு தமிழகம் மட்டுமல்லாது உலகளவில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.